கோடை வெயில் சுட்டெரித்துக்கொண்டிருந்த நேரத்தில் மழை வந்து அனைவரையும் குளிர்வித்துவிட்டது. எரிந்துகொண்டிருந்த காணல் நீர் கரைந்து விட்ட இந்த சமயத்தில் சூடாக மொறு மொறுவென ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறதா..? யோசிக்காமல் உடனே இந்த மெது வடையை செய்து கொடுங்க.. இதற்கு மாவு அரைக்க வேண்டாம். நிமிடத்தில் செய்துவிடலாம். ரெசிபி இதோ...
தேவையான பொருட்கள் :
ரவை - 2 கப்
தயிர் - 1 1/2 கப்
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - 1/2 துண்டு
சமையல் சோடா - 1/4 tsp
உப்பு - தே.அ
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை :
ரவையை ஒரு கிண்ணத்தில் கொட்டி அதில் தயிர் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். வடை பதம் வரவில்லை எனில் மீண்டும் கொஞ்சம் தயிர் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள்.
இப்போது அதை தட்டுப்போட்டு மூடி 10 நிமிடங்கள் ஊற வையுங்கள்.
10 நிமிடங்கள் கழித்து பச்சைமிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, உப்பு, சமையல் சோடா சேர்த்து நன்கு பிசைந்து கலந்துகொள்ளுங்கள்.
அடுத்ததாக கடாய் வைத்து வடை சுடுவதற்கு ஏற்ப எண்ணெய் ஊற்றி காய வையுங்கள்.
பின் எப்போதும்போல் மாவை கொஞ்சமாக எடுத்து தட்டி போடுங்கள். சிலருக்கு வெங்காயம் சேர்த்தால் பிடிக்கும் எனில் வெங்காயமும் சேர்த்து சுடலாம்.
அவ்வளவுதான் உங்களுடைய ஃபேவரட் மெது வடை தயார்.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.