Home /News /lifestyle /

மேங்கோ சப்பாத்தி... கேட்கும் போதே நாவூறுதா..? அப்போ உடனே செஞ்சு சாப்பிடுங்க..!

மேங்கோ சப்பாத்தி... கேட்கும் போதே நாவூறுதா..? அப்போ உடனே செஞ்சு சாப்பிடுங்க..!

மேங்கோ சப்பாத்தி

மேங்கோ சப்பாத்தி

இந்த மேங்கோ சீசனில் மட்டும்தான் இந்த சாப்பாத்தியை செய்ய முடியும். எனவே மிஸ் பண்ணாம வீட்டில் செய்து பாருங்க...

இனிப்பு , புளிப்பு , காரம் என அறுசுவையும் கலந்ததுதான் இந்த மேங்கோ சப்பாத்தியின் தனிச்சிறப்பு. அதுவும் இந்த மேங்கோ சீசனில் மட்டும்தான் இந்த சாப்பாத்தியை செய்ய முடியும். எனவே மிஸ் பண்ணாம வீட்டில் செய்து பாருங்க...

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - 1 கப்
மாம்பழம் - 1
சீரகப்பொடி - 1/2 Tsp
சிவப்பு மிளகாய் பொடி - 1/4 Tsp
உப்பு - தே.அ
நெய் அல்லது எண்ணெய் - சுடுவதற்கு தே.அ



செய்முறை :

மாம்பழத்தின் சதைப்பகுதியை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

பின் கோதுமை மாவில் சீரகப்பொடி, மிளகாய் பொடி , உப்பு கொஞ்சம் சேர்த்து கலந்துவிடுங்கள்.

இந்த கிளைமேட்டிற்கு சுட சுட கார போண்டா சாப்பிட்டால் எப்படி இருக்கும்..? உடனே செய்ய ரெசிபி..!

பின் மாம்பழம் சதையை சேர்த்து நன்கு பிசையுங்கள். தேவைப்படும்போது தண்ணீர் தெளித்து பிசையுங்கள்.

பின் அரை மணி நேரம் ஊறியதும் எப்போதும் போல் திரட்டி கல்லில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி சுட்டு எடுங்கள்.

அவ்வளவுதான் மேங்கோ சப்பாத்தி தயார்.

 

 

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Chapati, Mango

அடுத்த செய்தி