இந்த இட்லிக்கு இட்லி மீந்து போனால்தான் செய்ய வேண்டும் என்றில்லை. எப்போதும் செய்யும் இட்லியில் சிலவற்றை எடுத்து வைத்து மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள். குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். வித்தியாசமான சுவையில் இருக்கும் இதை நீங்கள் செய்து பார்க்க ரெசிபி இதோ...
உருண்டை தயாரிக்க :
இட்லி - 3
உருளைக்கிழங்கு - 2
கோதுமை மாவு - 2 tsp
அரிசி மாவு - 1 tsp
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
மிளகாய் தூள் - 1/2 tsp
கரம் மசாலா - 1/2 tsp
தயிர் - 1 tsp
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தே.அ
இட்லி லாலிபாப் தயாரிக்க :
கோதுமை மாவு - 1 tsp
வறுத்த சேமியா - 1/2 கப்
எண்ணெய் - தே.அ
செய்முறை :
இட்லிகளை மிக்ஸி ஜாரில் தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக்கொள்ளுங்கள்.
பின் வேக வைத்த உருளைக்கிழங்களை நன்கு மசித்துக்கொள்ளுங்கள்.
இப்போது ஒரு கிண்ணத்தில் அரைத்த இட்லி, மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து மற்ற பொருட்களையும் ஒவ்வொன்றாக சேர்த்துக்கொள்ளுங்கள்.
பின் அனைத்தையும் நன்கு பிசைந்துக்கொள்ளுங்கள். அடுத்ததாக கையில் கொஞ்சமாக எண்ணெய் தடவிக்கொண்டு அவற்றை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளுங்கள்.
பின் 1 ஸ்பூன் கோதுமை மாவை கட்டிகளின்றி தண்ணீரில் கரைத்துக்கொள்ளுங்கள்.
பின் சேமியாவை சிறு சிறு துண்டுகளாக உடைத்துக்கொள்ளுங்கள்.
குழந்தைகள் விரும்பி சாப்பிட வெஜிடபிள் பிரெட் உப்புமா : இதை இப்படி செஞ்சு கொடுங்க...
அடுத்ததாக கடாயில் வறுக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய வையுங்கள்.
இப்போது பிடித்து வைத்துள்ள இட்லி உருண்டையில் ஒன்றை எடுத்து கரைத்து வைத்துள்ள கோதுமையில் பிரட்டிக்கொள்ளுங்கள்.
பின் அப்படியே அதை உடைத்து வைத்துள்ள சேமியா துண்டுகளில் பிரட்டிக்கொள்ளுங்கள்.
அதை அப்படியே காய வைத்துள்ள எண்ணெய் சட்டியில் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். இப்படி ஒவ்வொன்றாக செய்தால் ரெசிபி தயார்.
வறுத்த உருண்டைகளில் குச்சிகளை சொறுகினால் இட்லி லாலிபாப் ரெசிபி தயார்.
இதற்கு மயோனைஸ் அல்லது சாஸ் தொட்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.