ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

இன்னைக்கு என்ன சமையல்..? குழந்தைகள் விரும்பும் ’பேபி கார்ன் பனீர் மசாலா’செய்து கொடுத்து அசத்துங்க..!

இன்னைக்கு என்ன சமையல்..? குழந்தைகள் விரும்பும் ’பேபி கார்ன் பனீர் மசாலா’செய்து கொடுத்து அசத்துங்க..!

பேபி கார்ன் பனீர் மசாலா

பேபி கார்ன் பனீர் மசாலா

பேபி கார்னில் நார்ச்சத்து இருப்பதால் உடலுக்கும் நல்லது. அதோடு புரோட்டீன் நிறைந்த பனீரும் சேர்த்து சமைப்பதால் குழந்தைகளுக்கு மதிய உணவாக இதை செய்து கொடுக்கலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பேபி கார்ன் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவாகும். அதில் சமையல் செய்து கொடுத்தால் ரசித்து உண்பார்கள். அதோடு இதில் நார்ச்சத்து இருப்பதால் உடலுக்கும் நல்லது. அதோடு புரோட்டீன் நிறைந்த பனீரும் சேர்த்து சமைப்பதால் குழந்தைகளுக்கு மதிய உணவாக இதை செய்து கொடுக்கலாம். இரவு டின்னருக்கு கூட செய்து கொடுங்கள். மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். சரி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பனீர் - 200 கிராம்

பேபி கார்ன் - 100 கிராம்

குடமிளகாய் - 1

வெங்காயம் - 3 (2 அரைத்தது, 1 நறுக்கியது)

தக்காளி - 2 அரைத்தது

இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

தனியா - 2 டீஸ்பூன்

சீரகம் - 1 தேக்கரண்டி

சிவப்பு மிளகாய் - 4

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

கருப்பு மிளகு - 4

கசூரி மேத்தி - 1 டீஸ்பூன்

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் - 4 டீஸ்பூன்

முந்திரி விழுது - 2 டீஸ்பூன்

தயிர் - அரை கிண்ணம்

ஃபிரெஷ் கிரீம் - 2 டீஸ்பூன்

உப்பு - ருசிக்கேற்ப

செய்முறை :

ஒரு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, நீளமாக வெட்டிய பேபி கார்ன் துண்டுகளை சேர்த்து 5-7 நிமிடம் வதக்கவும்.

இப்போது அதில் 1 வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். 5 நிமிடம் வதக்கிய பின் அதனுடன் உப்பு சேர்த்து வதக்குங்கள். பின் அதை தனியாக எடுத்து வைத்துவிடுங்கள்.

மற்றொரு பாத்திரத்தில் தனியா, சீரகம், காய்ந்த மிளகாய் ,கருப்பு மிளகு ஆகியவற்றை குறைந்த தீயில் வறுக்கவும். இந்த மசாலா கலவையை மிக்ஸியில் பொடியாக அரைக்கவும்.

மீதமுள்ள எண்ணெயை வாணலியில் ஊற்றி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் வதக்கி, அதில் அரைத்த வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்க்கவும்.

செய்யும் போதே மணக்கும் தக்காளி குருமா ரெசிபி : 15 நிமிடத்தில் செஞ்சு முடிச்சிடலாம்..!

வெங்காயம்-தக்காளியை சிறிய தீயில் 10 நிமிடம் வதக்கிய பின் மஞ்சள்தூள், அரைத்த மசாலா பொடி, முந்திரி விழுது, தயிர் சேர்த்து சிறு தீயில் கிளறவும்.

உப்பு சேர்த்து இப்போது வறுத்த பேபி கார்ன், கேப்சிகம் மற்றும் வெங்காயத்தை கிரேவியில் சேர்க்கவும். இறுதியாக, பனீர் துண்டுகள் மற்றும் கசூரி வெந்தயம் சேர்த்து, அதை மூடி 5-7 நிமிடங்கள் குறைந்த தீயில் வேக வையுங்கள். நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.

அவ்வளவுதான் பேபி கார்ன் பனீர் மசாலா தயார். தவா ரொட்டி, நான் அல்லது தந்தூரியுடன் பரிமாறலாம்.

First published:

Tags: Food recipes, Paneer recipes