ஹெல்தியான ஸ்னாக்ஸுக்கு கீரை வடை : எந்த கீரையிலும் செய்யலாம்... அருமையாக இருக்கும்

ஹெல்தியான ஸ்னாக்ஸுக்கு கீரை வடை : எந்த கீரையிலும் செய்யலாம்... அருமையாக இருக்கும்

கீரை வடை

கீரையில் குழம்பு, பொறியல் செய்து சாப்பிடுவதை போல் வடையும் செய்து சாப்பிடலாம். வித்தியாசமான சுவையாக இருக்கும்.

 • Share this:
  உணவில் கீரை கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர். இதில் எண்ணற்ற நன்மைகள் இருக்கின்றன. கீரையில் குழம்பு, பொறியல் செய்து சாப்பிடுவதை போல் வடையும் செய்து சாப்பிடலாம். எனவே வித்தியாசமான சுவைக்கு இப்படி செய்து பாருங்கள்.

  தேவையான பொருட்கள் :

  கீரை - 1 கட்டு
  உளுந்து - 200 கிராம்
  கடலை பருப்பு - 50 கிராம்
  பச்சை மிளகாய் - 2
  சீரகம் - 1 1/2 tsp
  உப்பு - தே.அ
  எண்ணெய் - வறுக்க தே.அ
  இஞ்சி - 1 துண்டு  செய்முறை :

  கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறியதும் ஒன்றும் பாதியுமாக அரைத்துக்கொள்ளுங்கள். தண்ணீர் இல்லாமல் அரைக்க வேண்டும். மாவு கையில் ஒட்டக் கூடாது.

  கீரையை மிகவும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

  #PotatoBreadRoll | குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு பிரெட் ரோல் : எப்படி செய்வது..?

  அரைத்த மாவில் பச்சை மிளகாய், சீரகம், உப்பு, இஞ்சி, கீரை சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள்.

  பின் கடாயில் எண்ணெய் விட்டு எண்ணெய் காயும் வரை காத்திருங்கள். எண்ணெய் காய்ந்ததும் எலுமிச்சை அளவு மாவு எடுத்து ஓட்டவடை அளவுக்கு வட்டமாக தட்டி நடுவே ஒரு ஓட்டை போட வேண்டும். பின் லாவகமாக எண்ணெயில் உடையாமல் போடுங்கள்.

  எண்ணெய் பயன்படுத்தாமல் சிக்கனை இப்படி சூப்பராக வறுக்கலாம்.. டயட் பிரியர்களே.. உங்களுத்தான் இந்த ரெசிபி..

  பொன்னிறமாக பொறிந்ததும் எண்ணெய் இறுத்து வெளியே எடுத்துவிடுங்கள். அவ்வளவுதான் கீரை வடை தயார்.

  இந்த வடைக்கு அரை கீரை ,சிறு கீரை, பசலை கீரை, முருங்கைக்கீரை என எந்த கீரையும் போடலாம். எதுவாக இருந்தாலும் பொடியாக நறுக்க வேண்டும்.
  Published by:Sivaranjani E
  First published: