சப்பாத்திக்கு அருமையாக இருக்கும் கடாய் மஷ்ரூம் - செய்முறை இதோ...

Food Recipe |

சப்பாத்திக்கு அருமையாக இருக்கும் கடாய் மஷ்ரூம் - செய்முறை இதோ...
கடாய் மஷ்ரூம்
  • Share this:
சப்பாத்திக்கு பொருத்தமாக இருக்கும் கடாய் மஷ்ரூம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

காளான் - 200 கிராம்


வெங்காயம் - 1
எண்ணெய் - 2 tbsp
குடைமிளகாய் - 1இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 tsp
தக்காளி - 1 கப்
தயிர் - 1 1/2 tbsp
மஞ்சள் பொடி - 1/4 tsp
மிளகாய் பொடி - 1/2 tsp
எண்ணெய் - 2 tbsp
சீரகம் - 1 tsp
கசூரி மேத்தி - 1 tsp

மசாலா அரைக்க :

தனியா - 2 tsp
சீரகம் - 1/2 tsp
காய்ந்த மிளகாய் - 3
மிளகு - 1/4 tsp
கிராம்பு - 2
பட்டை - 1/2 துண்டு
பிரிஞ்சு இலை - 1செய்முறை :

வெங்காயத்தின் ஒரு பாதியை பெரிய வாக்கில் சதுரமாக நறுக்கிக்கொள்ளுங்கள். மீதியை பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். தக்காளியை அரைத்துக்கொள்ளுங்கள்.

மசாலா அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கடாயில் எண்ணெய் ஊற்றாமல் வறுத்து மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி குடைமிளகாய் மற்றும் வெங்காயத்தை கண்ணாடி பதத்தில் வதக்கி தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

மீண்டும் எண்ணெய் ஊற்றி காளானை பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து பொறிக்க விடுங்கள். பின் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்துக்கொள்ளுங்கள்.

பப்பாளிக்காய் கூட்டு செஞ்சு பாத்திருக்கீங்களா...? இன்னைக்கே டிரை பண்ணி பாருங்க..!

தக்காளியை ஊற்றி வதக்குங்கள். சற்று சுருங்கியதும் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போகும் வரை சுருங்க வதக்குங்கள். வதங்கியதும் தயிர் சேர்த்து கிளருங்கள்.

அடுத்ததாக சதுர வடிவில் நறுக்கிய வெங்காயம் , குடை மிளகாய் சேர்த்து பிரட்டி வதக்கவும். பின் வதக்கிய காளானை சேர்த்து பிரட்டி ஒரு கப் தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து கிளறுங்கள்.

பின் தட்டிபோட்டு மூடி 5 நிமிடங்களுக்கு கொதிக்க வையுங்கள். பின்பு எண்ணெய் பிரிந்து வரும் வரை பிரட்டிக்கொண்டே இருங்கள்.

எண்ணெய் பிரிந்து வர மசாலா சுருங்கியதும், கசூரி மேத்தி தூவி அடுப்பை அணைத்துவிட்டு கொத்தமல்லி தழை தூவுங்கள்.
First published: August 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading