ஜிலேபி வாயில் போட்டாலே தேன் சுவை. கண்களை ரசித்து ருசிக்கலாம். வீட்டிலேயே செய்தால் தெகிட்ட தெகிட்ட சுவைக்கலாம். எப்படி செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
புளித்த இட்லி மாவு - ஒரு கப்
கேசரி பவுடர் - 1/2 ஸ்பூன்
மைதா மாவு - 1 1/4 கரண்டி
எண்ணெய் - வறுக்க
பாகு தயாரிக்க :
சர்க்கரை - 2 கப்
தண்ணீர் - 1 கப்
எலுமிச்சை - 1/2
செய்முறை :
2 அல்லது 3 நாள் ஆட்டி நன்கு புளித்த அரிசி மாவு வேண்டும். அதில் கேசரி பவுடரை நிறத்திற்காக சேர்த்துக்கொள்ளவும்.
பின் அதில் மைதாமாவு சேர்த்து கட்டிகள் இல்லாதவாறு கரைத்துக்கொள்ளவும். இதற்கிடையே பாகு தயாரிக்க தண்ணீர் சர்க்கரை ஊற்றி கொதிக்க வையுங்கள். அதில் எலுமிச்சை சாறு பிழிந்துகொள்ளுங்கள்.
தற்போது கரைத்து வைத்துள்ள மாவை கோதுமை கவர் அல்லது ஏதேனும் ஃபுட் பாக்கெட்ஸ் இருந்தால் அதில் மாவை ஊற்றி அதன் அடி முணையில் சிறு துளையிட்டுக்கொள்ளுங்கள். இது ஜிலேபி முறுக்கலுக்கு உதவும்.
தற்போது கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவை இரண்டு சுத்து முறுக்கு போல் சுற்றி எடுங்கள். பின் பொண்ணிறமாக வந்ததும் அப்படியே எடுத்து சர்க்கரை பாகுவில் போட்டுவிடுங்கள்.
5 நிமிடங்கள் ஊறினால் போதும். நீண்ட நேரம் ஊற விட்டால் மொறுமொறுப்பு போய்விடும். அவ்வளவுதான் சுவையான ஜிலேபி தயார்.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.