டிஃபனிற்கு தொட்டுக்கொள்ள எதுவுமே இல்லையா... கவலையே வேண்டாம் உடனே ரெடி பண்ணுங்க இட்லி பொடி..!

டிஃபனிற்கு தொட்டுக்கொள்ள எதுவுமே இல்லையா... கவலையே வேண்டாம் உடனே ரெடி பண்ணுங்க இட்லி பொடி..!

இட்லிப் பொடி

அரைத்து பொடியாக்கி சேமித்து வைத்துக்கொண்டால் எப்போது வேண்டுமென்றாலும் நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிடலாம்.

 • Share this:
  வீட்டில் எதுவுமே இல்லை என்றாலும் தோசை, இட்லிக்கு அருசுவையாக செய்யலாம் இட்லி பொடி. இதை அரைத்து பொடியாக்கி சேமித்து வைத்துக்கொண்டால் எப்போது வேண்டுமென்றாலும் நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிடலாம். எப்படி செய்யுறது பாக்கலாம்.

  தேவையான பொருட்கள்:

  உளுத்தம் பருப்பு - 1/4 கப்
  சிவப்பு மிளகாய் - 20
  பெருங்காயம் - தேவையான அளவு
  வெள்ளை எள் - 1 tsp
  தேங்காய் துருவியது - 1 tsp
  அரிசி - 1 tsp
  எண்ணெய் - 2 tsp
  உப்பு - தேவையான அளவு  செய்முறை :

  கடாயில் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, சிவப்பு மிளகாய், பெருங்காயக் கட்டி, வெள்ளை எள், தேங்காய்த் துருவல், அரிசி ஆகியவற்றைப் பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

  அதைக் காற்றில் நன்கு ஆரவிட்டு வெப்பம் தனியச் செய்யவும்.

  வெப்பம் தணிந்ததும் மிக்ஸியில் கொஞ்சம் மொரமொரப்பாக அரைத்துக்கொள்ளவும். அரைக்கும்போது உப்பு சேர்த்துக்கொள்ளவும்.

  அவ்வளவுதான். மொருமொரு தோசைக்கு, மல்லிகை பூ இட்லிக்குப் பொருத்தமான இட்லிப் பொடி தயார். இதைக் காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்துஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.

   

   
  Published by:Sivaranjani E
  First published: