இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள நிமிடங்களில் சமைக்கலாம் ’பாம்பே சட்னி’ - ரெசிபி இதோ...

சட்னி அரைக்க தேங்காய் இல்லை, பொட்டுக்கடலை இல்லை என புலம்ப வேண்டாம். உடனே இப்படி பாம்பே சட்னி நொடியில் செய்து அசத்திவிடுங்கள்.

இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள நிமிடங்களில் சமைக்கலாம் ’பாம்பே சட்னி’ - ரெசிபி இதோ...
பாம்பே சட்னி
  • Share this:
தேவையான பொருட்கள் :

வெங்காயம் - 2
தக்காளி - 1


பச்சை மிளகாய் - 1
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 5 பற்கள்கடலை மாவு - 1 tbsp
வெல்லம் - 3/4 tsp
தண்ணீர் - 1 1/2 கப்
மஞ்சள் - 1/4 tsp
மிளகாய் தூள் - 1 tsp

தாளிக்க :

எண்ணெய் - 2 tsp
கடுகு - 1 tsp
உளுத்தம் பருப்பு - 1 tsp
வெந்தையம் - 1/4 tsp
சீரகம் - 1 tsp
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவுசெய்முறை :

முதலில் கடலை மாவை 1 -1/2 கப் தண்ணீரில் கட்டியாகாமல் கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.

கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொறிந்ததும் சீரகம், வெந்தையம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை என சேருங்கள்.

ஞாபகத் திறனை அதிகரிக்கும் ’வல்லாரைக் கீரை கூட்டு’ - சமைப்பது எப்படி..?

பின்பு இஞ்சி , பூண்டு, வெங்காயம் சேர்த்து வதங்கியதும், தக்காளி சேர்த்துக்கொள்ளுங்கள். வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்துக்கொள்ளுங்கள்.

வதங்கியதும் கரைத்த கடலை மாவை ஊற்றி கலக்குங்கள். உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.

பின் நன்குக் கலக்கிவிட்டு சிறு தீயில் 4- 5 நிமிடங்களுக்குக் கொதிக்கவிட்டு இறுதியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.

அவ்வளவுதான் பாம்பே சட்னி தயார்.
First published: July 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading