முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இட்லி பொடி இப்படிதான் அரைக்கனுமா..? நீங்களும் தெரிஞ்சுக்க இதோ ரெசிபி..!

இட்லி பொடி இப்படிதான் அரைக்கனுமா..? நீங்களும் தெரிஞ்சுக்க இதோ ரெசிபி..!

இட்லி பொடி

இட்லி பொடி

எதுவும் இல்லாத பட்சத்தில் கமகமவென நல்லெண்ணெய் ஊற்றி டிஃபனை ஜமாய் செய்துவிடலாம்.

  • Last Updated :

இல்லத்தரசிகள் முதல் பேச்சுலர்ஸ் வரை இட்லிப் பொடி என்பது ஒரு வரம். எதுவும் இல்லாத பட்சத்தில் கமகமவென நல்லெண்ணெய் ஊற்றி டிஃபனை ஜமாய் செய்துவிடலாம். அதேபோல் இட்லிப் பொடியை அப்படியே தோசையில் தூவினால் பொடி தோசை.. அதிலேயே கொஞ்சம் வெங்காயம் தூவினால் வெங்காய தோசை... இப்படி பலவகைகளில் உதவக்கூடிய இந்த இட்லிப் பொடி இரகசியம் உங்களுக்குத் தெரியுமா? வீட்டிலேயே இட்லிப் பொடி செய்ய ரெசிபி இதோ...

தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு - 1/4 கப்

சிவப்பு மிளகாய் - 20

பெருங்காயம் - தேவையான அளவு

வெள்ளை எள் - 1 tsp

தேங்காய் துருவியது - 1 tsp

அரிசி - 1 tsp

எண்ணெய் - 2 tsp

உப்பு - தேவையான அளவு

செய்முறை :

கடாயில் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, சிவப்பு மிளகாய், பெருங்காயக் கட்டி, வெள்ளை எள், தேங்காய்த் துருவல், அரிசி ஆகியவற்றைப் பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

அதைக் காற்றில் நன்கு ஆரவிட்டு வெப்பம் தனியச் செய்யவும்.

வெப்பம் தணிந்ததும் மிக்ஸியில் கொஞ்சம் மொரமொரப்பாக அரைத்துக்கொள்ளவும். அரைக்கும்போது உப்பு சேர்த்துக்கொள்ளவும்.

பூசணிக்காயில் இப்படி பொரியல் செஞ்சு சாப்பிட்டிருக்கீங்களா..? 15 நிமிடத்தில் செய்யக்கூடிய ரெசிபி...

அவ்வளவுதான். மொருமொரு தோசைக்கு, மல்லிகை பூ இட்லிக்குப் பொருத்தமான இட்லிப் பொடி தயார்.

இதைக் காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்துஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.

First published:

Tags: Dinner Recipes, Food recipes