இட்லி மிச்சமாகினால் ’இட்லி மஞ்சூரியன்’ செய்யலாம் - சிம்பிள் ரெசிபி

இட்லி அதிகமாகிவிட்டதே அல்லது மீந்துபோய் விட்டதே என கவலைக் கொள்ள வேண்டாம்.

இட்லி மிச்சமாகினால் ’இட்லி மஞ்சூரியன்’ செய்யலாம் - சிம்பிள் ரெசிபி
இட்லி மஞ்சூரியன்
  • Share this:
இட்லி அதிகமாகிவிட்டதே , மீந்துபோய் விட்டதே என கவலைக் கொள்ள வேண்டாம். இப்படி ஸ்னாக்ஸ் போல் இட்லி மஞ்சூரியன் செய்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்

இட்லி - 3


அரிசி மாவு - 3/4 tsp
மிளகாய் பொடி - 1/2 tsp
வெண்ணெய் - தே.அபூண்டு - 4
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
குடை மிளகாய் - 1
மைதா மாவு - 3/4 tsp
உப்பு - தே.அ
தக்காளி சாஸ் - 1 tbsp
சில்லி சாஸ் - 1 tbsp
சோயா சாஸ் - 1 tbsp
ஸ்பிரிங் ஆனியன் - 1/4 கப்செய்முறை :

மீந்த இட்லியை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். அதில் மிளகாய் தூள் மற்றும் அரிசி மாவைத் தூவிக் கலக்குங்கள்.

கடாய் வைத்து வெண்ணெயை உருக்கி இட்லியை மிதமான சூட்டில் பிரட்டுங்கள். அது பொன்னிறமாக ஃபைரையானதும் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

அதே கடாயில் வெண்ணெய் போட்டு உருகியதும் பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள். பின்பு வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.

மாலையில் சூடாக செய்து சாப்பிடலாம் காலிஃப்ளவர் பஜ்ஜி : செய்முறை இதோ...

வதங்கியதும் குடை மிளகாய் சேருங்கள். சில நொடிகள் வதங்கியதும் கொடுக்கப்பட்டுள்ள சாஸ் வகைகளை ஊற்றுங்கள்.

உப்பு தே.அ சேர்த்துக்கொள்ளவும். அடுத்ததாக மைதா மாவு , 2- 3 tbsp தண்ணீர் சேர்த்து கிரேவி பதத்தில் கலக்குங்கள். கெட்டிப் பதம் வந்ததும் வறுத்து வைத்துள்ள இட்லியை சேர்த்து பிரட்டுங்கள்.

மசாலாக்கள் நன்றாகக் கலந்ததும் இறுதியாக ஸ்பிரிங் ஆனியன் தூவுங்கள். உப்பு பதம் பார்த்ததும் அடுப்பை அனைத்துவிடுங்கள்.

அவ்வளவுதான் இட்லி மஞ்சூரியன் தயார்.
First published: July 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading