Home /News /lifestyle /

பிரெட்டும் பாலும் இருந்தா இப்படியொரு ரெசிபி செஞ்சிடலாமா..? நாவூற வைக்கும் அருமையான டெசர்ட்..!

பிரெட்டும் பாலும் இருந்தா இப்படியொரு ரெசிபி செஞ்சிடலாமா..? நாவூற வைக்கும் அருமையான டெசர்ட்..!

ஷாகி துக்டா

ஷாகி துக்டா

சிலருக்கு முழுமையான விருந்து என்பது இறுதியாக வெற்றிலைப்பாக்கு போடுவது போல் டெசர்ட்டில் முடித்தால்தான் திருப்தி அடைவார்கள். அந்த வகையில் ஹைதராபாத்தில் மிகவும் ஃபேமசான ஷாகி துக்டா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

திருமணம், ரெஸ்டாரண்ட் என எங்கு சென்றாலும் கண் முன்னே வகை வகையான உணவுகளை அடுக்கி வைத்திருந்தாலும் ஒரு சிலர் டெசர்ட் வகைகளைத்தான் தேடுவார்கள். சிலருக்கு முழுமையான விருந்து என்பது இறுதியாக வெற்றிலைப்பாக்கு போடுவது போல் டெசர்ட்டில் முடித்தால்தான் திருப்தி அடைவார்கள். அந்த வகையில் ஹைதராபாத்தில் மிகவும் ஃபேமசான ஷாகி துக்டா எப்படி செய்வது என்று பார்க்கலாம். இது அங்கு மிகவும் பிரபலமான அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய டெசர்ட் ஆகும்.

தேவையான பொருட்கள் :

ரப்டி செய்ய :

பால் - 1 லி
குங்குமப்பூ - 1 சிட்டிகை
பாதாம் ,பிஸ்தா , முந்திரி - 1/2 கப்
ஏலக்காய் பொடி - 1 ஸ்பூன்
சர்க்கரை - 1/2 கப்

பிரெட் மிக்ஸ் :

பிரெட் - 6
எண்ணெய் - வறுக்க தே.அ
சர்க்கரை - 1 கப்
தண்ணீர் - 1/2 கப்



செய்முறை :

முதலில் பாலை நன்கு காய்ச்ச வேண்டும். பால் நன்கு கொதித்து கெட்டி பதத்திற்கு வர வேண்டும். அதுவரை அடிப்பிடிக்காமல் கிளறிக்கொண்டே இருங்கள்.

பால் கொதி வந்ததும் குங்குமப்பூவில் 2 ஸ்பூன் பால் கலந்து அதை ஊற வையுங்கள்.

பால் கெட்டிப்பதம் வரும்போது குங்குமப்பூ, நட்ஸ் வகைகள், ஏலக்காய் பொடி , சர்க்கரை சேர்த்து கலந்துவிடுங்கள்.

பால் கொதிக்கும்போது சுற்றிலும் உருவாகும் ஏடுகளை கிளறி கிளறி விடுங்கள். அதுதான் இந்த டெசர்ட்டின் சுவையே...

Chithra Pournami Special Recipe | தேங்காய் சாதம் செய்ய ரெசிபி இதோ...

பால் நன்கு கெட்டியாகி.. கிட்டத்தட்ட பால்கோவா போல் வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு ஆற வையுங்கள்.

அடுத்ததாக தண்ணீரில் சர்க்கரை கலந்து தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.

இப்போது பிரட் துண்டுகளை துண்டு துண்டாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

பின் எண்ணெய் கடாயில் ஊற்றி நன்கு காய்ச்சிக்கொள்ளுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்த பிறகு பிரட் போட்டு வறுக்கவும். எண்ணெய் காயாமல் போட்டால் பிரெட் எண்ணெய்யை அதிகமாக உறிஞ்சும். எனவே நன்கு காய்ஞ்சதும் போடுங்கள்.

போட்டவுடனேயே பிரெட் பொன்னிறமாக மாறிவிடும். எனவே பக்குவமாக செய்யுங்கள்.

வறுத்த பிரெட் துண்டுகளை சர்க்கரை தண்ணீரில் இரண்டு பிரட்டு பிரட்டி உடனே எடுத்துவிடுங்கள். இல்லையெனில் கரைந்துவிடும்.

பிரெட்டுகளை ஒரு தட்டில் போட்டு அதன் மேல் காய்ச்சிய பாலை சுற்றிலும் ஊற்றிவிடுங்கள். அதன் மேலே இறுதியா கொஞ்சம் குங்குமப்பூ தூவி விடுங்கள். இப்போது பரிமாறுங்கள்.

அவ்வளவுதான் ஷாகி துக்டா ரெசிபி...

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Bread recipes, Milk

அடுத்த செய்தி