பொதுவாகவே கொள்ளு எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. குறிப்பாக இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் சிறந்த பங்காற்றும். அதேபோல் இரத்தத்தை சுத்திகரிப்பது, உடல் எடையை கட்டுக்குள் வைப்பது என பல நன்மைகளை கொண்டிருப்பதால் மக்களும் இதை உணவு பயன்பாட்டில் அதிகமாக்கிவிட்டனர். அந்த வகையில் இந்த கொள்ளு பொடியை அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். இதை சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம் அல்லது இட்லி பொடியாகவும் தொட்டுக்கொள்ளலாம். சரி எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கொள்ளு - 1/2 கப்
கடலை பருப்பு - 2 tbsp
எள்ளு - 3 tbsp
காய்ந்த மிளகாய் - 6
பூண்டு - 6
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - 1/2 tsp
எண்ணெய் - 1/2 tsp
உப்பு - தே.அ
செய்முறை :
இந்த ரெசிபி செய்யும் முன் கொள்ளுவை கழுவி காய வைத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சரியான அளவில் தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
பின் கடாய் வைத்து அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு கொள்ளுவை சேர்த்து சிறிது நிறம் மாறும் வரை வறுத்து எடுங்கள்.
பின் கடலை பருப்பு , பூண்டு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் , காய்ந்த மிளகாய் என மற்ற பொருட்களை சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
அனைத்தும் சூடு ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்கவும். அதோடு உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.
கொர கொரப்பாக அரைத்ததும் அதன் சூடு தணிய தட்டில் கொட்டிக்கொள்ளுங்கள். பின் காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ளுங்கள்.
அவ்வளவுதான் கொள்ளு பொடி தயார்.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.