ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

உங்களுக்கு ஹார்லிக்ஸ் என்றால் மிகவும் பிடிக்குமா? அப்போ கட்டாயம் இந்த ரெசிபியும் பிடிக்கும்!

உங்களுக்கு ஹார்லிக்ஸ் என்றால் மிகவும் பிடிக்குமா? அப்போ கட்டாயம் இந்த ரெசிபியும் பிடிக்கும்!

ஹார்லிக்ஸ் பர்ஃபி

ஹார்லிக்ஸ் பர்ஃபி

சிலர் ஹார்லிக்ஸ் பவுடரில் ஐஸ்கிரீம் செய்து செய்து சாப்பிடுவார்கள். இதற்கு பால், சர்க்கரை, ஹாலிக்பவுடர் மூன்று மட்டும் போதும். இதனை ஒன்றாக கலந்து ஒரு மணி நேரம் பிரிட்ஜில் வைத்து எடுத்தால் ஹாலிக்ஸ் ஐஸ் ரெடி.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நம்மில் பலருக்கு ஹார்லிக்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். மேலும், அதை பற்றி சொன்னாலே சிறு வயதில் யாருக்கும் தெரியாமல் ஹார்லிக்ஸ் பவுடரை திருட்டுத்தனமாக சாப்பிடும் நினைவுகளும் சிலருக்கு வரலாம். அந்தளவுக்கு ஹார்லிக்ஸ் சாப்பிடுவது என்றால் பலருக்கு பிடித்த விஷயமாக இருக்கும். ஹார்லிக்ஸ் பவுடரை அப்படியே சாப்பிட்டால் அது வயிற்றில் கட்டியாக மாறிவிடும் என்று அம்மா பலமுறை எச்சரிக்கை கொடுத்தாலும் கேட்காமல் சாப்பிடுபவர்களும் இருக்கின்றனர்.

சிலர் ஹார்லிக்ஸ் பவுடரில் ஐஸ்கிரீம் செய்து செய்து சாப்பிடுவார்கள். இதற்கு பால், சர்க்கரை, ஹாலிக்பவுடர் மூன்று மட்டும் போதும். இதனை ஒன்றாக கலந்து ஒரு மணி நேரம் பிரிட்ஜில் வைத்து எடுத்தால் ஹாலிக்ஸ் ஐஸ் ரெடி. ஹார்லிக்ஸ் பிரியர்களுக்கு தற்போது மேலும் ஒரு ரெசிபி உற்சாகத்தை தரப்போகிறது. ஆம், சிறுவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் ரெசிபி தான் அது. ஹார்லிக்சில் பர்பியூம் செய்து சாப்பிடலாம் என்று ஒரு சமையல் வீடியோ விளக்கியுள்ளது.
 
View this post on Instagram

 

A post shared by Arjun Chauhan 🧿 (@oye.foodieee)ஃபுட் பிளாகர் அர்ஜுன் சவுகான் என்பவர் தந்து இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவை வெளியிட்டார். “ஹார்லிக்ஸ் பர்ஃபியை முயற்சித்தேன். உண்மையில், இது மிகவும் ஆச்சரியமாக இருந்தது, ”என்று அவர் வீடியோவுடன் கேப்ஷன் செய்திருந்தார். மேலும் அந்த இனிப்புகள் எங்கே தயாரிக்கப்பட்டது என்பதையும் அவர் குறிப்பிட்டிருந்தார். அதாவது அந்த இனிப்பு செய்யப்பட்ட இடம் "ஷாகுன் ஸ்வீட்ஸ், மௌஜ்பூர், டெல்லி," என்று அவர் தெரிவித்துள்ளார்.

நான்கு நாட்களுக்கு முன் வீடியோ வெளியிடப்பட்டது. இந்த வீடியோ, பகிரப்பட்டதிலிருந்து, பல்லாயிரக்கணக்கான வியூஸ்களையும், லைக்குகளையும் பெற்றது. மேலும், ஹார்லிக்ஸ் மூலம் செய்யப்படும் இனிப்புகளை சுவைக்க விரும்புவதாக பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். இந்த இனிப்பு வகையை நீங்கள் வீட்டிலேயே கூட தயாரிக்கலாம். எப்படி என்பதை பின்வருமாறு காணலாம்.

தேவையான பொருட்கள் :

பால் - ¼ கப்

நெய் - ¼ கப்

சர்க்கரை - ¼ கப்

ஹார்லிக்ஸ் - ¼ கப்

பால் பவுடர் - 1 கப்

குங்குமப்பூ - சில இழைகள்

ஏலக்காய் தூள் - ½ தேக்கரண்டி

நறுக்கிய பாதாம் - 1/4 கப்

செய்முறை :

பேக்கிங் பான் அல்லது ட்ரேயில் சிறிது நெய் அல்லது வெண்ணெய் தடவி தனியாக வைக்கவும். ஒரு ஆழமான கடாயை அடுப்பில் வைத்து பால் சேர்த்து சூடாக்கவும். பின்னர் நெய் மற்றும் சர்க்கரையை சேர்த்து மிதமான சூட்டில் சர்க்கரை கரையும் வரை சூடாக்கவும்.

சர்க்கரை உருகியவுடன், மீதமுள்ள பொருட்களை அதாவது, ஹார்லிக்ஸ் பவுடர், பால் பவுடர், குங்குமப்பூ, ஏலக்காய் தூள் மற்றும் பாதாம் போன்றவற்றை ஒவ்வொன்றாக சேர்க்க வேண்டும். நீங்கள் சேர்க்கும்போது தொடர்ந்து கிளறிக்கொண்டே இருங்கள். அப்படியே விட்டுவிட்டால் கட்டியாகிவிடும். இப்போது அனைத்தையும் கலந்த பிறகு 2-3 நிமிடங்கள் கவலையை கிளற வேண்டும்.

Christmas 2021 Cakes : கிறிஸ்துமஸ் இந்த 5 வகையான கேக்குகளை செய்து பாருங்கள்

கலவையானது ஒரே மாதிரியானதாக, கெட்டி பதத்தில் கடாயின் பக்கங்களை விட்டு வெளியேறியவுடன், அடுப்பை அணைத்துவிட்டு, அந்த கலவையை பேக்கிங் பானில் ஊற்றி ஆற வைக்க வேண்டும். இப்போது மீதமுள்ள பாதம் கொட்டைகளைத் தூவி, பர்ஃபியில் அழுத்தவும். கலவை குளிர்ந்தவுடன் கூர்மையான கத்தியால் விரும்பிய வடிவங்களில் வெட்டி பரிமாறலாம்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Kids Food, Snacks