மீன் வறுவல் பொடி வீட்டிலேயே தயாரிக்க ரெசிபி இதோ

மீன் வறுக்க மிக்ஸிங் செய்யும்போது எலுமிச்சை சாறு பிழிந்துவிட்டு இந்த மசாலாவைக் கலந்து மீனில் தடவி ஊற வைத்து வறுத்தால் ருசியாக இருக்கும்.

மீன் வறுவல் பொடி வீட்டிலேயே தயாரிக்க ரெசிபி இதோ
மீன் வறுவல் பொடி
  • Share this:
மீன் வறுவலின் சுவையே அதன் மசாலா மிக்ஸிங்கில்தான் உள்ளது. எனவே அதன் சுவையை அசத்தலாக்கும் வகையில் வீட்டிலேயே எப்படி மீன் வறுவல் மசாலா பொடி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

மிளகு - 1/2 கப்


காய்ந்த மிளகாய் - 2 கப்
தனியா - 1 கப்
சீரகம் - 10 கிராம்சோம்பு - 10 கிராம்
கிராம்பு - 10 கிராம்
வெந்தயம் - 5 கிராம்
கடுகு - 5 கிராம்
மஞ்சள் தூள் - 1 tsp



செய்முறை :

கடாய் வைத்து எண்ணெய் ஊற்றாமல் தனியாவை சூடேறு வகையில் வறுத்து எடுங்கள். அதேபோல் மிளகு, சீரகம் என அனைத்தையும் தனித்தனியே வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள். பின் அதை சூடு போக காற்றாடவிடுங்கள்.

ஆயுத பூஜை முடிந்து வீட்டில் நிறைய பொரி மீந்திருச்சா..? வேஸ்ட் பண்ணாம இந்த மாலை நேர ஸ்நாக்ஸ் செய்து பாருங்கள்

சூடு தனிந்ததும் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக்கொள்ளுங்கள். பின் தட்டில் சூடு போக காய வைத்துவிட்டு டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ளுங்கள்.

மீன் வறுக்க மிக்ஸிங் செய்யும்போது எலுமிச்சை சாறு பிழிந்துவிட்டு இந்த மசாலாவைக் கலந்து மீனில் தடவி ஊற வைத்து வறுத்தால் ருசியாக இருக்கும்.
First published: October 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading