Home /News /lifestyle /

எப்போதும் குடிக்கும் ரோஸ் மில்க்கை ஒரு முறை இப்படி வித்தியாசமாக செய்து பாருங்கள்....

எப்போதும் குடிக்கும் ரோஸ் மில்க்கை ஒரு முறை இப்படி வித்தியாசமாக செய்து பாருங்கள்....

ரோஸ் மில்க்

ரோஸ் மில்க்

சிலர் வீட்டிலேயே செய்து வைத்து தேவைப்படும் போதெல்லாம் குடிப்பார்கள். அப்படிப்பட்ட ரோஸ் மில்க் ரசிகர்களுக்காகத்தான் இந்த ரெசிபி...

வெயில் காலம் வந்துவிட்டாலே ரோஸ் மில்க் பிரியர்களுக்கு கொண்டாட்டம்தான். காரணம்... வெயிலில் சில்லென ஏதாவது குடிக்க வேண்டும் என்று சொல்லி சொல்லியே ரோஸ் மில்க்கை வாங்கி வாங்கி குடிப்பார்கள். சிலர் வீட்டிலேயே செய்து வைத்து தேவைப்படும் போதெல்லாம் குடிப்பார்கள். அப்படிப்பட்ட ரோஸ் மில்க் ரசிகர்களுக்காகத்தான் இந்த ரெசிபி... செய்முறை இதோ...

தேவையான பொருட்கள் :

பால் - 1 லிட்டர்
கடல் பாசி - 4 கிராம்
சர்க்கரை - தே.அ
பால் பவுடர் - 1 ஸ்பூன்
ரோஸ் மில்க் எசன்ஸ் - 1 ஸ்பூன்
ரோஸ் எசன்ஸ் - 3 ஸ்பூன்



செய்முறை :

கடல் பாசியில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி அதை அப்படியே அடுப்பில் வைத்து கிளறிவிட்டால் கெட்டியான பதத்தில் கரைந்துவிடும்.

பின் அதில் அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கரைத்துவிடுங்கள். பின் அதை ஒரு தட்டில் வடிகட்டி ஊற்றி ஓரமாக வைத்துவிடுங்கள்.

பின் பாலை நன்கு காய்ச்சி குளிர வைத்துக்கொள்ளுங்கள்.

பின் பால் பவுடரை கட்டிகளின்றி பால் ஊற்றி கரைத்துக்கொள்ளுங்கள். அதை இப்போது காய்ச்சிய பாலில் கலந்துவிடுங்கள்.

Cold Coffee இப்படி தான் செய்யனுமா..? இத்தனை நாள் இது தெரியாம போச்சே... 2 நிமிடத்தில் செய்யலாம்..!

பின் ரோஸ் மில்க் எசன்ஸ் மற்றும் ரோஸ் எசன்ஸ் சேர்த்து கலந்துவிடுங்கள்.

இப்போது சர்க்கரை சேர்த்து கலந்துவிடுங்கள். அவ்வளவுதான் ரோஸ் மில்க் ரெடி.

இப்போது பரிமாறும்போது கிளாசில் தயார் செய்த கடல் பாசியை எடுத்துக்கொள்ளுங்கள். அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி கிளாசில் 2 ஸ்பூன் சேர்த்துக்கொள்ளுங்கள்.

பின் தயாரித்து வைத்துள்ள ரோஸ் மில்க்கை ஊற்றுங்கள். அவ்வளவுதான் அசத்தலான ரோஸ் மில்க் தயார். (தேவைப்பட்டால் இதில் சியா விதை, பாதாம் பிசின் கூட சேர்த்துக்கொள்ளலாம்.)

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Rose Milk

அடுத்த செய்தி