Home /News /lifestyle /

ஆரஞ்சு தோலில் சூப்பரான துவையல் செய்யலாம் : குளிர்காலத்தில் சாப்பிட்டால் மிகவும் நல்லது..! எப்படி செய்வது?

ஆரஞ்சு தோலில் சூப்பரான துவையல் செய்யலாம் : குளிர்காலத்தில் சாப்பிட்டால் மிகவும் நல்லது..! எப்படி செய்வது?

ஆரஞ்சு தோல்  துவையல்

ஆரஞ்சு தோல் துவையல்

ஆரஞ்சு பழத்தைக் காட்டிலும் ஆரஞ்சு தோலில்தான் விட்டமின் சி அதிகமாக இருக்கும் என மருத்துவர்கள் கூறுவார்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தற்போது ஆரஞ்சு, கமலா ஆரஞ்சு பழங்கள் சந்தையில் எளிதாகக் கிடைக்கும். ஆரஞ்சு பழத்தைக் காட்டிலும் ஆரஞ்சு தோலில்தான் விட்டமின் சி அதிகமாக இருக்கும் என மருத்துவர்கள் கூறுவார்கள். ஆனால் அதை சாப்பிட முடியாத காரணத்தினால் தூக்கி எரிந்துவிடுவோம். இனியும் அப்படி செய்யாதீர்கள். அதில் இப்படி சூப்பரான துவையல் செய்யலாம். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    முழு கமலா ஆரஞ்சு தோல் - 1
    பச்சை மிளகாய் - 6
    கடலை பருப்பு - 1tsp
    உளுந்து - 2 tsp
    கொத்தமல்லி தழை - தே.அ
    புளி - சிறிதளவு
    உப்பு - தே.அ
    எண்ணெய் - தாளிக்க
    கடுகு - சிறிதளவு
    பெருங்காயத்தூள் - சிட்டிகை



    செய்முறை :

    ஆரஞ்சு தோலில் உட்புறம் உள்ள வெள்ளை தோலை சீவி விட்டு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

    பின் அதை கொஞ்சம் எண்ணெய் ஊற்றி 5 நிமிடத்திற்கு வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள். புளி, உப்பு தவிர்த்து மற்ற பொருட்களையும் எண்ணெயில் வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.

    அவை ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு அதோடு புளி, உப்பு சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள். பின் அதை ஒரு கிண்ணத்தில் வழித்து எடுத்துக்கொள்ளுங்கள்.

    முட்டையில் மட்டுமல்ல.. இந்த உணவுகளிலிருந்தும் நீங்கள் அதிக புரோட்டீனைப் பெறலாம்..

    இறுதியாக எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து தாளித்து துவையலில் ஊற்றுங்கள்.

    அவ்வளவுதான் ஆரஞ்சு தோல் துவையல் தயார். ஆரஞ்சு தோலில் உள்ள துவர்ப்பும், கசப்புதான் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும் என்பதால் அதை தவிர்க்காமல் சாப்பிடுங்கள். ஆரோக்கியத்திற்கு நல்லது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sivaranjani E
    First published:

    Tags: Food, Orange peel

    அடுத்த செய்தி