வாழைப்பழமும் தயிரும் இருந்தால் போதும்..செலவே இல்லாமல் வெயிலுக்கு இதமான ஸ்மூதி ஜம்முனு குடிக்கலாம்..!

யோகர்ட் பனானா ஸ்மூதி

இதில் இருக்கும் தயிரும், வாழைப்பழம் ஊட்டச்சத்து மிக்கது என்பதால் தாராளமாக பருகலாம். வெயில் காலத்தின் வெப்பத்தை தனிக்கவும் நல்ல பானமாக இருக்கும்.

 • Share this:
  வாழைப்பழமும் தயிரும் சேர்த்து செய்யப்படும் இந்த ஸ்மூதி உங்கள் காலையை ஆற்றல் மிக்கதாக மாற்றும். இதில் இருக்கும் தயிரும், வாழைப்பழம் ஊட்டச்சத்து மிக்கது என்பதால் தாராளமாக பருகலாம். வெயில் காலத்தின் வெப்பத்தை தனிக்கவும் நல்ல பானமாக இருக்கும்.

  தேவையான பொருட்கள்

  கெட்டித் தயிர் - 1 கப்
  பாதாம் - 6
  வாழைப்பழம் - 2
  பால் - 1/2 கப்
  ஐஸ் கட்டிகள் - தே.அ
  சர்க்கரை - சுவைக்கு தேவைப்பட்டால்  செய்முறை :

  பாதாம் பருப்பை முதலில் போட்டு மிக்ஸியில் ஒன்றும் பாதியுமாக அரைத்துக்கொள்ளுங்கள். பின் தயிர் சேர்த்து அடித்துக்கொள்ளுங்கள். விருப்பம் இருந்தால் இதில் பேரிச்சம் பழங்களை கூட சேர்க்கலாம்.

  அடுத்ததாக வாழைப்பழம் சேர்த்து நன்கு மசித்தவாறு அரைத்துக்கொள்ளுங்கள்.

  இரத்த சோகை, மலச்சிக்கல், வாயுத்தொல்லை...பேரிச்சம்பழத்தை பாலில் ஊற வைத்து சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா..?

  அதன் பிறகு பால் சேர்த்து, தேவைப்பட்டால் சர்க்கரை சேர்த்து ஒரு ஓட்டு ஓட்டி எடுங்கள். இன்னும் கொஞ்சம் பால் தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம்.

  இறுதியாக அதை ஒரு கிளாஸில் ஊற்றி ஐஸ் கட்டிகளை அதற்குள் போட்டு கூலாக குடியுங்கள்.

  அவ்வளவுதான் யோகர்ட் பனானா ஸ்மூதி தயார்..!

   

   
  Published by:Sivaranjani E
  First published: