ஸ்வீட் சாப்பிட வேண்டும் என தோன்றுகிறதா..? ரவையை வைத்து சுவையான குலாப் ஜாமுன் செய்ய ரெசிபி இதோ...

ரவா குலாப் ஜாமுன்

குலாப் ஜாமுன் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த தின்பண்டமாக இருக்கிறது. மேலும், இந்த குலாப் ஜாமுன்களை செய்வது கடினமல்ல

  • Share this:
இந்தியாவில் தயாரிக்கப்படும் பாரம்பரிய இனிப்பு வகைகளில் குலாப் ஜாமுன் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த தின்பண்டமாக இருக்கிறது. மேலும், இந்த குலாப் ஜாமுன்களை செய்வது கடினம் என பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், சரியான செயல்முறையை கடைபிடித்தால் போதும் குலாப் ஜாமூனை ஈஸியா வீட்டிலேயே செய்யலாம். அதிலும் ரவையை வைத்து குலாப் ஜாமுன் செய்ய முடியும் என்பது உங்களுக்காவு தெரியுமா? இதனை மிகவும் எளிதாக செய்ய முடியும். கீழ்காணும் செய்முறையை பின்பற்றி வீட்டிலேயே சூடான சுவையான குலாப் ஜாமுன் செய்து அசத்துங்க.

தேவையான பொருட்கள்:

ரவா – 100 கிராம்
பால் – 3 கப்
நெய் – 2 டீஸ்பூன்
தண்ணீர் – 1 1/2 கப்
ஏலக்காய் – மூன்று
குங்குமப்பூ – சிறிதளவு
எலுமிச்சை பழம் – 1/2 பழம்
எண்ணெய் – 1/2 லிட்டர்
சர்க்கரை – 200 கிராம்

செய்முறை : 

சர்க்கரை பாகு தயாரிக்கும் முறை:

1. ஒரு கடாயை சூடாக்கி அதில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.
2. சர்க்கரை தண்ணீரில் நன்கு கரைந்ததும் அதில் சிறுது குங்குமப்பூ, ஏலக்காய் தூள், சிறிதளவு எலுமிச்சை சாறு போன்றவற்றை சேர்க்கவும். கரைசலை ஒரு கொதி நிலைக்கு கொண்டு வர வேண்டும். இப்பொது சர்க்கரை பாகு தயார்.ரவா குலாப் ஜாமுன் செய்முறை:

1. அடுப்பில் பாத்திரத்தை வைக்கவும்.

2. பாத்திரம் சூடேறியதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொள்ளவும். அதில் 2 டீஸ்பூன் நெய் சேர்த்து மற்றும் ஒரு கப் ரவையை சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.

3. பின்பு அவற்றில் மூன்று கப் காய்ச்சிய பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.

4. இந்த கலவையானது கெட்டி பதமாகும் வரை நன்றாக கிளறி கொண்டே இருக்க வேண்டும். அதாவது பால்கோவா பதத்திற்கு, நன்றாக கிளறி கொண்டே இருக்க வேண்டும்.

மாலையில் டீயுடன் மொறு மொறுவென சாப்பிட ’தட்டை’ : வீட்டிலேயே செய்ய ரெசிபி இதோ...

5. கலவை கெட்டியானதும் அடுப்பில் இருந்து இறக்கி வைக்க வேண்டும். பின்பு சூடு ஆறியதும், நன்றாக பிசைந்து கொள்ளவும்.

6. இப்பொது மாவு தயார். இந்த மாவினை சிறு சிறு உருண்டையாக உருட்டி தனியாக வைத்து கொள்ளவும்.

7. இதையடுத்து, ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அது சூடானதும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொறித்து எடுத்து கொள்ளவும்.

8. உருண்டைகளை பொரிக்கும் போது அடுப்பை மிதமான சூட்டில் வைக்க வேண்டும்.

9. உருண்டைகள் பொரிந்தவுடன் அதனை ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள சர்க்கரை பாகில் போட வேண்டும். சிறிது நேரம் ஊற வைத்தால் போதும். சுவையான மிகவும் ருசியான ரவா குலாப் ஜாமுன் ரெடி.

 

 
Published by:Sivaranjani E
First published: