Home /News /lifestyle /

பச்சை மிளகாய் சட்னி அரைக்க தெரியுமா..? காரமே தெரியாம அரைக்க ரெசிபி இதோ...

பச்சை மிளகாய் சட்னி அரைக்க தெரியுமா..? காரமே தெரியாம அரைக்க ரெசிபி இதோ...

பச்சை மிளகாய் சட்னி

பச்சை மிளகாய் சட்னி

காரம் தெரியாமல் அதேசமயம் அதன் நன்மைகளையும் பெற வேண்டுமெனில் இந்த சட்னியை அரைத்து சாப்பிட்டுப் பாருங்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பச்சை மிளகாய் காரம்தான் என்றாலும் அதன் நன்மைகள் எண்ணற்றது. எனவே அதன் காரம் தெரியாமல் அதேசமயம் அதன் நன்மைகளையும் பெற வேண்டுமெனில் இந்த சட்னியை அரைத்து சாப்பிட்டுப் பாருங்கள். ரெசிபி இதோ...

    தேவையான பொருட்கள் :

    பச்சை மிளகாய் - 10
    சின்ன வெங்காயம் - 15
    உளுந்து - 1 tbsp
    பூண்டு - 6
    புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
    சமையல் எண்ணெய் - 2 tbsp
    உப்பு - தே.அ

    தாளிக்க :

    கடுகு - 1/2 tsp
    கறிவேப்பிலை - சிறிதளவு



    செய்முறை :

    கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

    பின் சின்ன வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.

    பின் நறுக்கிய பச்சை மிளகாய் , பூண்டு சேர்த்து வதக்கவும் நன்கு வதக்கியபின் இறக்குவதற்கு முன் புளி சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.

    நட்ஸ் பாயாசம் எப்படி செய்ய வேண்டும் தெரியுமா..? சிம்பிளான ரெசிபி இதோ....

    அடுப்பை அணைத்து விட்டு ஆறியதும் கெட்டிப்பதத்தில் அரைத்துக்கொள்ளுங்கள்.

    பின் தாளிக்க கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை சேர்த்து அரைத்த விழுதில் கொட்டவும்.

    அவ்வளவுதான் பச்சை மிளகாய் சட்னி தயார்.

     

     
    Published by:Sivaranjani E
    First published:

    Tags: Chutney, Green Chilli

    அடுத்த செய்தி