• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • உங்கள் வேலையை சுலபமாக்கும் புளிச்சக்கீரை தொக்கு : அவசரத்திற்கு உதவ ஃபிரிட்ஜில் அரைச்சு வச்சுக்கோங்க...

உங்கள் வேலையை சுலபமாக்கும் புளிச்சக்கீரை தொக்கு : அவசரத்திற்கு உதவ ஃபிரிட்ஜில் அரைச்சு வச்சுக்கோங்க...

புளிச்சக்கீரை தொக்கு

புளிச்சக்கீரை தொக்கு

இதை இட்லி , தோசைக்கு தொட்டுக்கலாம். குழம்புக்கு துவையலாக தொட்டுக்கொள்ளலாம், நெய் , நல்லெண்ணெய் விட்டு தாளித்த சாதமாகவும் செய்யலாம்.

  • Share this:
கீரையின் புளிப்பு, தனியா மணம், மிளகாய் காரம் என இந்த புளிச்சக்கீரை தொக்கு உங்களுக்கு புது சுவை அனுபவத்தை தரும். இதை வாரத்திற்கு ஒரு முறை அரைச்சு ஃபிரிட்ஜில் வைத்துக்கொண்டால் அவசர நேரத்தில் உதவும். இதை இட்லி , தோசைக்கு தொட்டுக்கலாம். குழம்புக்கு துவையலாக தொட்டுக்கொள்ளலாம், நெய் , நல்லெண்ணெய் விட்டு தாளித்த சாதமாகவும் செய்யலாம். இப்படி பல வகைகளில் உங்களுக்கு உதவும். எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

புளிச்ச கீரை - ஒரு கட்டு
தனியா - 1 tsp
வெந்தயம் - 1/2 tsp
சீரகம் - 1/2 tsp
வரமிளகாய் - 20
எண்ணெய் - 5 tsp
உப்பு - 1/2 tsp

தாளிக்க

எண்ணெய் – 2 tsp
கடுகு – 1/2 tsp
சீரகம் – 1/2 tsp
கடலைப்பருப்பு – 1/2 tsp
உளுத்தம் பருப்பு – 1/2 tsp
வர மிளகாய் – 2
பூண்டு – பத்து பல்,
கறிவேப்பிலை – ஒரு கொத்து



செய்முறை :

முதலில் பொடி அரைக்க வேண்டும். அதற்கு கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், வெந்தயம், வரமிளகாய் , தனியா சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள். ஆறியதும் மிக்ஸியில் பொடியாக அரைத்துக்கொள்ளுங்கள்.

சுண்டைக்காய் குழம்பு செய்வது எப்படி?

அடுத்ததாக கடாயில் எண்ணெய் விட்டு அலசி வைத்துள்ள புளிச்சக்கீரைரையை சேர்த்து கிளறிக்கொண்டே இருங்கள். அது அப்படியே குழந்து வரும்.

அப்போது அரைத்த பொடியை சேர்த்து கிளறுங்கள். ஈரப்பதம் குறைந்து கெட்டிப்பதம் வந்ததும் மற்றொரு கடாய் வைத்து தாளிக்க கொடுக்கப்பட்டுள்ளவற்றை சேர்த்து தாளித்து கிளறி வைத்துள்ள புளிச்சக்கீரையில் சேர்க்கவும்.

பின் கரண்டியால் நன்கு கிளறிக்கொள்ளுங்கள். அவ்வளவுதான் புளிச்சக்கீரை தொக்கு தயார்.

 

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: