• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • செரிமானத்தை தூண்டும் இஞ்சி துவையல் : எளிமையான ரெசிபி இதோ...

செரிமானத்தை தூண்டும் இஞ்சி துவையல் : எளிமையான ரெசிபி இதோ...

இஞ்சி துவையல்

இஞ்சி துவையல்

இதை உணவுடன் துவையலாக சேர்த்து உண்பது ஜீரண சக்தியை அதிகரிக்கும். வயிற்றுப் பிரச்னைகளுக்கும் நல்லது.

  • Share this:
இஞ்சித் துவையல் சாம்பார், மோர் குழம்பிற்கு பொருத்தமானது. இட்லி , தோசைக்கும் தொட்டுக்கொள்ளலாம். இதை உணவுடன் துவையலாக சேர்த்து உண்பது ஜீரண சக்தியை அதிகரிக்கும். வயிற்றுப் பிரச்னைகளுக்கும் நல்லது.

தேவையான பொருட்கள் :

இஞ்சி - 100 கிராம்
உளுத்தம் பருப்பு - 1 1/2 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 1 ஸ்பூன்
சிவப்பு மிளகாய் - 4
தேங்காய் - அரை கப்
கருவேப்பிலை - சிறிதளவு
புளி - கால் துண்டு
வெல்லம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு



செய்முறை :

வானலியில் நல்லெண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பை வறுத்து, பின் காய்ந்த மிளகாய், நறுக்கிய இஞ்சித் துண்டுகள், புளி சேர்த்து வதக்கவும்.

இறக்கும்போது கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

தற்போது அதை வெப்பம் போகும்வரை ஆறவிட்டு மிக்ஸியில் தண்ணீர் இல்லாமல் அரைக்கவும். அடுத்ததாக அதில் துருவிய தேங்காயை கொட்டி மீண்டும் அரைக்கவும்.

துவையலுக்கு ஏற்ப சிறிதளவு தண்ணீர் சேர்த்து, தேவையான அளவு உப்பும் சேர்த்து அரைக்கவும்.

உருளைக்கிழங்கை விட அதன் சாறில் மருத்துவ குணங்கள் அதிகமா..? மிஸ் பண்ணிடாதீங்க...

தேவைப்பட்டால் நல்லெண்ணெய் விட்டு கடுகு , கறிவேப்பிலை சேர்த்து துவையலில் தாளித்து ஊற்றலாம். இல்லையெனில் அப்படியேவும் சாப்பிடலாம்.

சுவையான இஞ்சி துவையல் ரெடி..!

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: