மொச்சைக் கொட்டையில் சாம்பார் செஞ்சு சாப்பிட்டிருக்கீங்களா..? இன்னைக்கே டிரை பண்ணுங்க..!

மொச்சைக் கொட்டையில் பல வகையான நன்மைகள் அடங்கியுள்ளன.

மொச்சைக் கொட்டையில் சாம்பார் செஞ்சு சாப்பிட்டிருக்கீங்களா..? இன்னைக்கே டிரை பண்ணுங்க..!
மொச்சைக் கொட்டையில் சாம்பார்
  • Share this:
மொச்சைக் கொட்டையில் பல வகையான நன்மைகள் அடங்கியுள்ளன. எனவே அதில் இப்படி சாம்பார் வைத்து சாப்பிடுவதிலும் நன்மைகள் கிடைக்கும். எனவே எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு - 1/2 கப்


மொச்சைக் கொட்டை - 1 கப்
புளி - சிறிய எலுமிச்சை அளவு
வெங்காயம் - 1தக்காளி - 1
சாம்பார் பொடி - 2 tsp
எண்ணெய் - 2 tsp
கடுகு - 1 tsp
உளுத்தம் பருப்பு - 1 tsp
கடலைப் பருப்பு - 1 tsp
வெந்தையம் - 1/2 tsp
மஞ்சள் பொடி - 1/2 tsp
பெருங்காயத்தூள் - 1/4 tsp
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு



செய்முறை :

புளியை தண்ணீரில் ஊற வைத்துக்கொள்ளுங்கள். மொச்சைக் கொட்டையை ஒரு மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளுங்கள். துவரம் பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளுங்கள். பின் குக்கரில் மஞ்சள் சேர்த்து வேக வைத்துக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக மொச்சைக் கொட்டையையும் குக்கரில் வேக வைத்துக்கொள்ளுங்கள்.

புதினா ரசம் வெச்சு சாப்பிட்டிருக்கீங்களா...? இன்னைக்கே செஞ்சு பாருங்க..!

கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளியுங்கள். பின் உளுத்தம் பருப்பு , கடலை பருப்பு சேருங்கள். அடுத்ததாக வெந்தையம் சேர்த்துக்கொள்ளுங்கள். பின் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.

அடுத்ததாக தக்காளி சேர்த்துக்கொள்ளுங்கள். தக்காளி வதங்கியதும் வேக வைத்த துவரம் பருப்பை சேருங்கள். பின் மொச்சைக் கொட்டை சேர்த்து புளித் தண்ணீரைக் கரைத்து ஊற்றுங்கள்.

உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். சாம்பார் பொடியும் சேருங்கள்.

10 நிமிடங்களுக்குக் கொதிக்க வையுங்கள். சாம்பாரில் தண்ணீர் வற்றி கெட்டிப் பதம் வந்ததும் கொத்துமல்லி, கறிவேப்பிலை தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.

அவ்வளவுதான் சூப்பரான சுவையில் மொச்சைக் கொட்டை சாம்பார் தயார்.
First published: July 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading