பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் நம் கண்கானிப்பில் இல்லாமல் சாப்பிடும் போது பெற்றோர்களுக்கு ஒருவித பயம் இருக்கும். சரியாக சாப்பிடுகிறார்களா இல்லையா என... இந்த பயத்தை போக்க நீங்கள் சுவையான வகையில் உணவு சமைத்துக்கொடுத்தால் கவலையே பட வேண்டாம். அந்த வகையில் ஆரோக்கியமாகவும் அதேசமயம் சுவையாகவும் சமைக்க வேண்டும் எனில் இந்த முட்டை சாதம் செய்து கொடுங்கள். அதற்கான ரெபிசி இதோ...
தேவையான பொருட்கள் :
சாதம் - 1 கப்
முட்டை - 4
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன்
கொத்தமல்லி தழை - 1 கொத்து
சீரகம் - 1/2 tsp
எண்ணெய் - 4 tsp
மஞ்சள் தூள் - 1/4 tsp
செய்முறை :
முதலில் அரிசியை உப்பு சேர்த்து உதிரி உதிரியாக வடித்து எடுத்துக்கொள்ளுங்கள்.
கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்த்து தாளியுங்கள்.
பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.
வெங்காயம் வதங்கிய பின் முட்டை உடைத்து ஊற்றி அடிப்பிடிக்காதவாறு கிளறிக்கொண்டே இருங்கள்.
பின் உப்பு கொஞ்சம் சேர்த்து கிளறுங்கள்.
முட்டை வெந்ததும் வேக வைத்த சாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறுங்கள். ஸ்பிரிங் ஆனியன் இருந்தால் அதையும் தூவி கிளறலாம்.
அதன்மேல் மிளகுத்தூள் தூவி மீண்டும் நன்கு கிளறிவிடுங்கள். உப்பு பதம் போதவில்லை எனில் அதையும் கொஞ்சம் தூவி கலந்துவிட முட்டை சாதம் தயாராகிவிடும்.
அவ்வளவுதான் இதை குழந்தைகளுக்கு கட்டிக்கொடுக்க நன்கு விரும்பி சாப்பிடுவார்கள்.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.