ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

வாய்க்கு இனிப்பாக , புளிப்பாக சாப்பிடனும் போல தோனுதா..? இந்த உலர்ந்த இனிப்பு மாங்காய் செஞ்சு வச்சுக்கோங்க..!

வாய்க்கு இனிப்பாக , புளிப்பாக சாப்பிடனும் போல தோனுதா..? இந்த உலர்ந்த இனிப்பு மாங்காய் செஞ்சு வச்சுக்கோங்க..!

உலர்ந்த இனிப்பு மாங்காய்

உலர்ந்த இனிப்பு மாங்காய்

வீட்டிலேயே இனிப்பு மாங்காய் செய்து வைத்துக்கொண்டால் நினைக்கும் போதெல்லாம் சாப்பிடலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

திடீரென இனிப்பாக அல்லது புளிப்பாக ஏதாவது சாப்பிடனும் போல தோணும். அந்த நேரத்தில் இப்படி வீட்டிலேயே இனிப்பு மாங்காய் செய்து வைத்துக்கொண்டால் நினைக்கும் போதெல்லாம் சாப்பிடலாம். இது ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள் :

மாங்காய் - 3

சர்க்கரை - 1-2 கப்

பவுடர் சுகர்- 1/2 ஸ்பூன்

செய்முறை :

மூன்று மாங்காய்களை தோல் சீவி அவற்றை நீள வாக்கில் நறுக்கிக்கொள்ளுங்கள்.

பின் ஒரு பெரிய அகலமான பாத்திரத்தில் மாங்காய்கள் மூழ்குமாறு தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள்.

பின் நறுக்கிய மாங்காய்களை போட்டு வேக வையுங்கள். நன்கு வேகக் கூடாது முக்கால்வாசி வேக வேண்டும்.

வெந்ததும் சற்று சூடு போகட்டும். பின் அதில் சர்க்கரை சேர்த்து நன்கு குளுக்கி விடுங்கள்.

அதை அப்படியே இரண்டு நாட்களுக்கு மூடி போட்டு ஊற வையுங்கள்.

இந்த பிரச்சனை இருப்பவர்கள் பழங்களை இப்படித்தான் சாப்பிட வேண்டும் : மீறினால் என்ன ஆகும்..?

இரண்டு நாட்கள் கழித்து அவற்றில் உள்ள மாங்காய் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து ஒரு தட்டில் தனித்தனியே வையுங்கள்.

பின் அதன் மேல் துணி போட்டு மூடி ஒரு நாள் முழுவதும் வெயிலில் வையுங்கள். அவ்வப்போது இரண்டு புறங்களும் மாங்காய்களை திருப்பி திருப்பி வையுங்கள். அப்போதுதான் ஈரப்பதம் போகும்.

அதிகமாகவும் காய்ந்துவிடக் கூடாது.

காய்ந்ததும் அவற்றை ஒரு கிண்ணத்தில் போட்டு பவுடர் சுகரை சேர்த்து நன்கு குளுக்கிவிட்டால் உலர் இனிப்பு மாங்காய் தயார்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Mango, Sweet recipes