முருங்கைக்கீரையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் நிறைவாக உள்ளன. அதிலும் முக்கிய ஊட்டச்சத்தான இரும்புச் சத்தை பெற முருங்கைக்கீரை அவசியமானது. ஆனால் இதை குழந்தைகள் அவ்வளவாக விரும்பி சாப்பிட மாட்டார்கள். எனவே அவர்களுக்கு முருங்கைக்கீரை என்பதே தெரியாதவாறு முருங்கைக்கீரை சாதம் செய்து கொடுங்கள்.
தேவையான பொருட்கள் :
முருங்கைக்கீரை பொடி அரைக்க :
முருங்கைக்கீரை - 2 கைப்பிடி
எண்ணெய் - 1 tsp
உளுத்தம் பருப்பு - 1 tsp
கடலை பருப்பு - 1 tsp
காய்ந்த மிளகாய் - 4
சீரகம் - 1/2 tsp
எள்ளு - 2 tsp
மஞ்சள் தூள்: - 1 சிட்டிகை
உப்பு - 1/2
சாதம் தாளிக்க :
நல்லெண்ணெய் - 3 tsp
கடுகு - 1/2tsp
சீரகம் - 1/2 tsp
காய்ந்த மிளகாய் - 2
முந்திரி அல்லது வேர்கடலை- தே.அ
உப்பு - தே.அ
முருங்கைக்கீரை பொடி - 3 tsp
செய்முறை :
முதலில் முருங்கைக்கீரையை அலசி பருத்தி துணியில் போட்டு ஈரத்தை எடுத்துவிடுங்கள்.
பின் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி முருங்கைக்கீரையை பிரட்டி எடுத்தால் ஈரப்பதம் நீங்கிவிடும். பின் அதை தனியாக ஆற வைத்தால் மொறுமொறுவென மாறிவிடும்.
பின் அதே கடாயில் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு , காய்ந்த மிளகாயை எண்ணெய் இல்லாமல் வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
குக்கரில் ரசம் சாதம் செஞ்சு சாப்பிட்டிருக்கீங்களா..? குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட ரெசிபி..!
பின் சீரகம் , எள்ளு சேர்த்து வறுத்துக்கொள்ளுங்கள்.
அனைத்தும் சூடு தணிந்ததும் மிக்ஸி சாரில் சேர்த்து பின் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.
அவ்வளவுதான் முருங்கைக்கீரை பொடி தயார். இதை டப்பாவில் அடைத்து தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்ளலாம்.
இப்போது சாதம் தாளிக்க எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்ததும், கறிவேப்பிலை வேர்கடலை சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.
பின் முருங்கைக்கீரை பொடி சேர்த்து கிளறியதும் சாதம் சேர்த்து பிரட்டிக்கொள்ளுங்கள். உப்பு தேவையான அளவு சேர்த்து பிரட்டுங்கள்.
அவ்வளவுதான் முருங்கைக்கீரை சாதம் ரெசிபி தயார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.