முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / புத்தாண்டு இரவில் சூப்பரான சுவையில் இந்த ஸ்வீட் செய்து அசத்துங்கள்..! இந்த ஒரு பொருள் போதும்..!

புத்தாண்டு இரவில் சூப்பரான சுவையில் இந்த ஸ்வீட் செய்து அசத்துங்கள்..! இந்த ஒரு பொருள் போதும்..!

ஸ்வீட்

ஸ்வீட்

2021 வரவேற்கும் இரவு நன்நாளில் இந்த அருமையான ஸ்வீட்டை குடும்பத்தினருக்கு செய்து கொடுங்கள்.

  • Last Updated :

எதிர்பாராதா விஷயங்களை எதிர்பார்க்க வைத்தது 2020. பலருக்கும் பல அனுபவங்களைக் கற்றுக்கொடுத்தது என்றே சொல்லலாம். அதில் நன்மைகளும் உண்டு. தீமைகளும் உண்டு. ஆனால் அவை இரண்டும் அந்த மனிதனின் சூழ்நிலையைப் பொருத்தது. எதுவாக இருப்பினும் இனி வரும் ஆண்டையும் 2020 போலவே 2021 யும் இன்பமாய் வரவேற்போம். நல்லவற்றையே எதிர்பார்ப்போம். 2021 வரவேற்கும் இரவு நன்நாளில் இந்த அருமையான ஸ்வீட்டை குடும்பத்தினருக்கு செய்து கொடுங்கள். என்னென்ன தேவை..எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

டார்க் ஃபேண்டஸி பிஸ்கெட் - 1 பாக்ஸ்

டெய்ரி மில்க் சாக்லெட் சில்க் - 20 ரூபாய் பாக்கெட் 1

பால் - 2 ஸ்பூன்

பாதாம் மற்றும் நட்ஸ் - அரை கையளவு

செய்முறை

பாதாம் மற்றும் நட்ஸை பொடியாக அரைத்துக்கொள்ளுங்கள்.

டார்க் ஃபேண்டஸி பாக்கெட்டில் உள்ள அத்தனை பிஸ்கெட்டுகளையும் ஒரு கின்னத்தில் உடைத்து தூளாக்கிக் கொள்ளுங்கள்.

அதில் பாதாம் நட்ஸை சேர்த்து கலந்துகொள்ளுங்கள். அதில் 1 ஸ்பூன் பால் விட்டு நன்கு பிசைந்துகொள்ளுங்கள்.

நன்கு பிசைய பிஸ்கெட் கெட்டி பதத்தில் வரும். அப்போது மீண்டும் 1 ஸ்பூன் பால் விட்டு நன்கு பிசைய உருண்டை பிடிக்கும் பதத்திற்கு வரும்.

மூட்டு வலியா? ஈறுகளில் இரத்தம் கசிகிறதா? கால்சியம் நிறைந்த 5 உணவுகளின் ரெசிப்பி இதோ..

அதைக்கொண்டு சிறு சிறு உருண்டைகளாக 6 உருண்டைகளை பிசையலாம். அப்படி உருட்டிவிட்டு அதன் மேல் பல் குத்தும் குச்சியை சொருகிவிடுங்கள்.

பின் ஒரு கின்னத்தில் தண்ணீரை காய்ச்சி எடுத்துக்கொள்ளுங்கள். அதற்குள் சிறு கின்னம் நிற்க வைப்பதற்கு ஏற்ப எடுத்துக்கொள்ளுங்கள்.

அதற்குள் சாக்லெட்டுகளை உடைத்துப்போடுங்கள். அந்த கின்னத்தை சூடாக இருக்கும் தண்ணீர் மேல் வைக்க சாக்லெட் உருகும். அதில் 1 ஸ்பூன் பால் விட்டு கலந்துவிட சாக்லெட் நன்கு உருகிவிடும்.

தற்போது பிடித்து வைத்துள்ள பிஸ்கெட் உருண்டைகள் மீது இந்த சாக்லெட் திரவத்தை ஊற்றி நனையுங்கள்.

இறுதியாக மீதம் இருக்கும் பாதாம் , முந்திரி தூளை அதன் மேல் லேசாக தூவுங்கள்.

top videos

    அவ்வளவுதான் அதை சொட்டும் சாக்லெட் திரவத்துடன் அப்படியே எடுத்து வாயில் கடித்து சாப்பிட சுவை சொர்கத்தையே காட்டும்.

    First published:

    Tags: New Year 2021, New Year Celebration, Sweets