என்னதான் விருந்தில் பல வகைகள் இருந்தாலும் இறுதியாக ரசம் இல்லை எனில் அந்த விருந்து முழுமைப் பெறாது. திருப்தியும் இருக்காது. அந்த அளவிற்கு ரசத்திற்கென தனி மவுசு உண்டு. காய்ச்சல், அஜீரணம், சளி என உடல்நலம் சரியில்லை என்றாலும் ரசம்தான் வரம். இது நோய் எதிர்ப்பு சக்திக்கும் உதவியாக இருக்கும். அந்த வகையில் ரசத்தை கூட்டி வைத்து சாப்பிடுவது ஒரு வகை எனில் இப்படி ரசம் சாதமாக குக்கரில் வடித்து சாப்பிடுவது தனி சுவைதான். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
அரிசி - 1 கப்
எண்ணெய் - 3 tsp
தக்காளி - 3
புளி - நெல்லிக்காய் அளவு
பூண்டு - 3 பல்
பச்சை மிளகாய் - 3
காய்ந்த மிளகாய் - 2
தனியா - 2 tsp
துவரம் பருப்பு - 2 tsp
மிளகு - 1/2 tsp
சீரகம் - 1 tsp
பெருங்காயத்தூள் - 1/4 tsp
கடுகு - 1/2 tsp
உளுத்தம் பருப்பு - 1/2 tsp
மஞ்சள் தூள் - 1/4 tsp
கறிவேப்பிலை - 1கொத்து
கொத்தமல்லி - 1 கைப்பிடி
உப்பு - 1 tsp
செய்முறை :
முதலில் அரிசியையும், துவரம்பருப்பையும் ஒன்றாக சேர்த்து கழுவி ஊற வைத்துவிடுங்கள்.
பின் தக்காளி மற்றும் புளியை கரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
அடுத்ததாக மிக்ஸி ஜாரில் தனியா, மிளகு, சீரகம், பூன்ரு, பச்சை மிளகாய் சேர்த்து எப்போதும் ரசத்திற்கு அரைப்பது போல் அரைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது அடுப்பில் குக்கரை வைத்து அதில் எண்ணெய் ஊற்றுங்கள். காஉந்ததும் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும். பின் கறிவேப்பிலை மற்றும் அரைத்த மசாலாவை சேர்த்து வதக்குங்கள்.
வேற லெவல் டேஸ்டில் வெங்காய வடை.. பக்குவமாய் செய்வது எப்படின்னு பாருங்க!
பச்சை வாசனை போனதும் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து அதோடு மஞ்சள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கலந்துவிடுங்கள்.
பொங்கி வரும் சமயத்தில் ஊற வைத்த அரிசி , பருப்பை சேர்த்துவிடுங்கள்.
இப்போது ஒரு கப் அரிசிக்கு 4-5 கப் தண்ணீர் சேர்க்க வேண்டும். இறுதியாக நன்றாக கலந்துவிட்டு கொத்தமல்லி தழை தூவி குக்கரை மூடி விடுங்கள்.
4-5 விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள். அவ்வளவுதான் சுட சுட ரசம் சாதம் தயார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.