• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • வீடே மணக்க சிக்கன் குழம்பு வெக்கனுமா..? அப்போ இந்த சீக்ரெட் பொடியை தெரிஞ்சு வச்சுக்கோங்க...

வீடே மணக்க சிக்கன் குழம்பு வெக்கனுமா..? அப்போ இந்த சீக்ரெட் பொடியை தெரிஞ்சு வச்சுக்கோங்க...

சிக்கன் குழம்பு பொடி

சிக்கன் குழம்பு பொடி

இதுவரை செய்ததை விட சற்று வித்யாசமான சுவைக்கு இந்தப் பொடியை  ஒரு ஸ்பூன் சேர்த்துப்பாருங்கள். வீடே மணக்கும்.

  • Share this:
சிக்கன் குழம்பு என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவார்கள். இதுவரை செய்ததை விட சற்று வித்யாசமான சுவைக்கு இந்தப் பொடியை  ஒரு ஸ்பூன் சேர்த்துப்பாருங்கள். வீடே மணக்கும்.

தேவையான பொருட்கள்:

தனியா - 100 கிராம்
சிவப்பு மிளகாய் - 25 கிராம்
மிளகு - 2 tsp
சீரகப் பொடி - 2 tsp
சோம்பு - 2 tsp
அரிசி - 2 tsp
ஏலக்காய் - 1 tsp
மஞ்சள் - 1
கசகசா - 1 tsp
கறிவேப்பிலை - சிறிதளவு
பிரிஞ்சு இலை - 2
ஸ்டார் பூ - 1
பட்டை - 1 இஞ்ச்
கிராம்பு - 5
கல் பாசி - சிறிதளவு
கருப்பு ஏலக்காய் - 2
கல் உப்பு - 1 tsp



செய்முறை :

காய்ந்த மிளகாயைத் தவிர மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் கடாயில் எண்ணெய் இல்லாமல் லேசாக வறுத்துக்கொள்ளவும்.

அதை வெப்பம் தனியுமாறு பெரிய தட்டில் கொட்டிக் காயவிடவும்.

குழந்தைகளுக்கு முருங்கைக்கீரை பருப்பு சாதம் செய்து கொடுங்கள்...விரும்பி சாப்பிடுவாங்க...

தற்போது அனைத்தையும் மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக்கொள்ளவும்.

பொடியை வெப்பம் போக காய வைத்து காற்று புகாத டப்பாவில் அடைத்துவையுங்கள்.

ஒரு மாதம் வரைப் பயன்படுத்தலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: