சீஸ் என்பது சாட் உணவு மட்டுமல்லாது நம் பசியை அவ்வப்போது ஆற்றவும் உதவும். அதுவும் பசியின் போது ருசியாகவும் கிடைத்தால் அதுதான் நமக்கு விருந்து. அந்த வகையில் எப்போதும் அவசரத் தேவைக்கு சீஸ் மற்றும் பிரெட் வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். இப்படி பசியின் தேவைக்கோ, ருசியின் தேவைக்கோ பயன்படுத்திக்கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :
பிரெட் - 2
முட்டை - 1
வெங்காயம் - 2 tbsp
பச்சை மிளகாய் - 1
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
மிளகுப் பொடி - கொஞ்சம் சுவைக்காக
உப்பு - தே.அ
சீஸ் - 2 tbsp
வெண்ணெய் - 1 tsp
செய்முறை :
ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக்கொள்ளுங்கள்.
பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள், உப்பு சேர்த்து கலக்கிக்கொள்ளுங்கள். பின் சீஸ் துருவி அதையும் கலந்துகொள்ளுங்கள்.
வெஜிடபிள் வெள்ளை குருமா செய்ய ரெசிபி!
இதை தற்போது முட்டை ஆம்லெட்டாக தவாவில் ஊற்றி பெப்பர் தூவி வாட்டி எடுக்கவும்.
அடுத்ததாக பிரெட்டை வெண்ணெய் தடவி இரு புறமும் வாட்டி எடுத்து அதன் நடுவே ஆம்லெட்டை இரண்டாக பிரித்து ஒன்றன் மேல் ஒன்றாக வைக்கவும்.
தற்போது மீண்டும் தவாவில் வைத்து பிரட்டை அழுத்தியவாறு இரு புறமும் வெண்ணெய் ஊற்றி வாட்டி எடுக்கவும். அவ்வளவுதான் சீஸ் ஆம்லெட் சாண்ட்விச் தயார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chat Recipes, Cheese, Sandwich recipes