Home /News /lifestyle /

மதிய உணவுக்கு காலிஃப்ளவர் பட்டாணி மசாலா : பத்தே நிமிடத்தில் செய்ய ரெசிபி...

மதிய உணவுக்கு காலிஃப்ளவர் பட்டாணி மசாலா : பத்தே நிமிடத்தில் செய்ய ரெசிபி...

காலிஃப்ளவர் பட்டாணி மசாலா

காலிஃப்ளவர் பட்டாணி மசாலா

காலிஃப்ளவரை பட்டாணி சேர்த்து இப்படி செய்து பாருங்கள். அப்புறம் அடிக்கடி செய்வீர்கள்.

காலிஃப்ளவரை எந்த வகையில் செய்தாலும் சுவை கொடுக்கும். அந்த வகையில் பட்டாணி சேர்த்து இப்படி செய்து பாருங்கள். அப்புறம் அடிக்கடி செய்வீர்கள்.

தேவையான பொருட்கள் :

காலிஃப்ளவர் - 500 கிராம்
பச்சை பட்டாணி - 1.5 கப்
தக்காளி - 2
வெங்காயம் - 1
நல்லெண்ணெய் - 1 tsp
கடுகு - 1/2 tsp
பச்சை மிளகாய் - 2
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
பூண்டு - 3 பல்
உப்பு - 1 tsp
மஞ்சள் பொடி - 1/2 tsp
மிளகாய் பொடி - 1/2 tsp
பெருங்காயத்தூள் - 1/4 tsp
கொத்தமல்லி - சிறிதளவு



செய்முறை :

முதலில் காலிஃப்ளவரை சுடு தண்ணீரில் சேர்த்து சுத்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

பின் கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் விடுங்கள். காய்ந்ததும் கடுகு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.

பின் வெங்காயம் மற்றும் பூண்டை இடித்து சேர்த்து நன்கு பொன்னிறமாக வரும் வரை வதக்கிக்கொள்ளுங்கள்.

பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கலந்துவிடுங்கள்.

பின் தக்காளி சேர்த்து நன்கு கலந்துவிட்டு 5 நிமிடங்களுக்கு சிறு தீயில் தட்டுப்போட்டு மூடி வேக வையுங்கள்.

ஏதாவது சாப்பிடனும் போல் உள்ளது என கேட்குக் குழந்தைகளுக்கு இந்த பிரெட் ரோல் செய்து கொடுங்கள்..

தக்காளி நன்கு குழைந்ததும் கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து கலந்து விடுங்கள். உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.

பின் காலிஃப்ளவர் மற்றும் பட்டாணி சேர்த்து நன்கு கலந்துவிடுங்கள். பின் தட்டுப்போட்டு மூடி 10 நிமிடங்களுக்கு வேக வையுங்கள்.

10 நிமிடங்கள் கழித்து திறந்தால் நன்கு வெந்திருக்கும். பின் இறுதியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.

அவ்வளவுதான் காலிஃப்ளவர் பட்டாணி மசாலா தயார்.

 

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Cauliflower recipe, Chickpeas

அடுத்த செய்தி