• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும் காலிஃப்ளவர் சப்ஜி..! எப்படி செய்வது தெரியுமா?

சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும் காலிஃப்ளவர் சப்ஜி..! எப்படி செய்வது தெரியுமா?

காலிஃப்ளவர் சப்ஜி

காலிஃப்ளவர் சப்ஜி

இன்னைக்கே டிரை பண்ணி பாருங்க..வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

  • Share this:
    குழந்தைகள் விரும்பி சாப்பிடும் காலிஃப்ளவரில் வித்தியாசமான சுவையில் இப்படி செய்து கொடுத்து அசத்துங்கள். சப்பாத்தி, பரோட்டாவிற்கும் சுவையாக இருக்கும். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    காலிஃப்ளவர் - 2 கப்
    முட்டை - 3
    எண்ணெய் - 2 tsp
    வெங்காயம் - 1
    தக்காளி - 2
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 tsp
    சோம்பு - 1 tsp
    மஞ்சள் தூள் - 1 tsp
    கரம் மசாலா - 1 tsp
    மிளகாய் தூள் - 2 tsp
    உப்பு - தே.அ



    செய்முறை :

    முதலில் காலிஃப்ளவரை தண்ணீரில் மஞ்சள் கலந்து வேக வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

    பின் கடாய் வைத்து எண்ணெய் விட்டு சோம்பு போடுங்கள்.

    பின் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்துகொள்ளுங்கள்.

    அடுத்ததாக தக்காளி சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.

    பின் வேக வைத்த காலிஃப்ளவரை சேர்த்து பிரட்டுங்கள்.

    வீட்டில் இந்த பொருட்கள் இருந்தால் போதும் : இருமல் , சளி , சுவாசப் பிரச்னைகளை போக்கும் அதிமருந்து தயார்..!

    அடுத்ததாக கொடுக்கப்பட்டுள்ள தூள் வகைகளை சேருங்கள். அதோடு உப்பும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

    தற்போது அனைத்தையும் நன்கு பிரட்டி அரை கிளாஸ் தண்ணீர் சேர்த்து தட்டுப்போட்டு கொதிக்க வையுங்கள்.

    தண்ணீர் வற்றியதும் முட்டைகளை உடைத்து ஊற்றி கிளறுங்கள். முட்டை உதிரியாக கலந்துவிட்டு சில நிமிடங்கள் வேக வைத்து பின் கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.

    அவ்வளவுதான் முட்டை போட்ட காலிஃப்ளவர் சப்ஜி தயார்.

     

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: