மாலையில் சூடாக செய்து சாப்பிடலாம் காலிஃப்ளவர் பஜ்ஜி : செய்முறை இதோ...

சில்லென பொழியும் மாலை நேர மழை வேளையில் இப்படி சூடாக பஜ்ஜி செய்து சாப்பிட்டால் அதைவிட வேறென்ன வேண்டும்..!

மாலையில் சூடாக செய்து சாப்பிடலாம் காலிஃப்ளவர் பஜ்ஜி : செய்முறை இதோ...
காலிஃப்ளவர் பஜ்ஜி
  • Share this:
காலிஃப்ளவரில் எந்த உணவு சமைத்தாலும் அது ருசியாகத்தான் இருக்கும். அந்தவகையில் சில்லென பொழியும் மாலை நேர மழை வேளையில் இப்படி சூடாக பஜ்ஜி செய்து சாப்பிட்டால் அதைவிட வேறென்ன வேண்டும்..! எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

காலிஃப்ளவர் - 1 கப்


கடலை மாவு - 1/2 கப்
மைதா மாவு - 2 tbsp
அரிசி மாவு - 1/4 கப்மிளகாய் தூள் - 1 tsp
உப்பு - தே.அ
எண்ணெய் - வறுக்க தே.அசெய்முறை :

காலிஃப்ளவரை நன்கு சுத்தம் செய்து அதன் பூக்களை தனித்தனியாக பிரித்து எடுத்துக்கொள்ளுங்கள். பின்பு தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் போட்டு எடுத்தால் அதில் இருக்கும் அழுக்குகள் வந்துவிடும். அதை தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக பாத்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள மற்ற பொருட்களை சேர்த்து பஜ்ஜி மாவு போடும் பதத்தில் கொஞ்சம் தண்ணீராகக் கலந்துகொள்ளுங்கள்.

சிறுகீரை பருப்புக்கூட்டு: வித்தியாசமான சுவையில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க.

கடாய் வைத்து வறுக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு காய விடுங்கள். சூடேறியதும் காலிஃப்ளவர் பூக்களை மாவில் நனைத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுங்கள்.

ஒரு முறை வறுத்ததும் உப்பு சரியாக உள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான் சூடான காலிஃப்ளவர் பஜ்ஜி தயார்.
First published: July 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading