Home /News /lifestyle /

வெங்காயம் போட்டு ப்ரக்கோலி பொரியல் இப்படி செஞ்சு பாருங்க... கொஞ்சமும் மிஞ்சாது..!

வெங்காயம் போட்டு ப்ரக்கோலி பொரியல் இப்படி செஞ்சு பாருங்க... கொஞ்சமும் மிஞ்சாது..!

ப்ரக்கோலி பொரியல்

ப்ரக்கோலி பொரியல்

உடல் எடையை குறைப்போர் கட்டாயம் எடுத்துக்கொள்ளும் காய் வகைகளில் இதுவும் இடம் பெறுகிறது. அந்த வகையில் அனைவருக்கும் ஏற்ற வகையில் காரசாரமாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    சமீப காலமாக ப்ரக்கோலி விரும்பிகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அதுவும் உடல் எடையை குறைப்போர் கட்டாயம் எடுத்துக்கொள்ளும் காய் வகைகளில் இதுவும் இடம் பெறுகிறது. அந்த வகையில் அனைவருக்கும் ஏற்ற வகையில் காரசாரமாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    ப்ரோக்கோலி – 1
    எண்ணெய் – 1 tbsp
    வெங்காயம் – 1/4 கப்
    பச்சைமிளகாய் – 2
    துருவிய தேங்காய் – 1 tbsp
    கடுகு – 1/2 tsp
    மிளகாய்த்தூள் – 1/2 tsp
    மல்லித்தூள் -1/2 tsp
    மஞ்சள்தூள் – 1/4 tsp
    உப்பு – தேவையான அளவு
    கறிவேப்பிலை – சிறிதளவு



    செய்முறை :

    முதலில் ப்ரக்கோலியை தண்ணீரில் போட்டு வேக வைத்து எடுத்துக்கொள்ளுங்கள். முக்கால் பதத்திற்கு வெந்தால் போதும். பின் தண்ணீரை இறுத்து விட்டு தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

    பின் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளிக்கவும். பின் பச்சை மிளகாய் , வெங்காயம் , கறிவேப்பிலை சேர்த்து சிவக்க வதக்கவும்.

    பின் வேக வைத்த ப்ரக்கோலியை சேர்த்து பிரட்டிக்கொள்ளுங்கள்.

    ரவை இருந்தால் போதும் மாலையில் சூப்பரான ஸ்நாக்ஸ் ரெடி... ரெசிபி இதோ....

    இப்போது அனைத்து தூள் வகைகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். உப்பும் சேர்த்து நன்கு பிரட்டுங்கள்.

    தட்டு போட்டு சில நிமிடங்கள் வேக வைக்கவும்.

    நன்கு வெந்ததும் இறுதியாக துருவிய தேங்காயை தூவி பிரட்டிவிட்டு அடுப்பை அணைத்துவிடுங்கள்.

    அவ்வளவுதான் ப்ரக்கோலி பொரியல் தயார்.

     

     
    Published by:Sivaranjani E
    First published:

    Tags: Broccoli, Food recipes

    அடுத்த செய்தி