ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ப்ரோக்கோலி பொரியல் ஒருமுறை இப்படி செய்து பாருங்க... குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவாங்க..!

ப்ரோக்கோலி பொரியல் ஒருமுறை இப்படி செய்து பாருங்க... குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவாங்க..!

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலி

ஒரு முறை இப்படி செய்து கொடுங்கள். மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ப்ரோக்கோலியை பெரும்பாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆனால் ஒரு முறை இப்படி செய்து கொடுங்கள். மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள் :

ப்ரோக்கோலி - 250 கிராம்

எண்ணெய் - 3 tsp

சீரகம் - 1/2 tsp

வெங்காயம் - 1

கறிவேப்பிலை - கொத்து

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 tsp

மஞ்சள் தூள் - 1/4 tsp

மிளகாய் தூள் - 1 tsp

தனியா தூள் - 1 tsp

கரம் மசாலா - 1/2 tsp

உப்பு - தே.அ

செய்முறை :

ப்ரோக்கோலியை காலிஃப்ளவர் போன்றுதான் சுத்தம் செய்ய வேண்டும். அதன் தண்டு பகுதியோடு நறுக்கிக்கொள்ளவும்.

பின் தண்ணீரில் உப்பு கொஞ்சம் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க வைத்து அலசி வடிகட்டி தனியாக எடுத்துக்கொள்ளுங்கள்.

பின் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து தாளிக்கவும்.

பின் வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்துக்கொள்ளுங்கள்.

Also Read : சப்பாத்திக்கு பேபி கார்ன் கிரேவி செஞ்சிருக்கீங்களா..? ஸ்டார் ஹோட்டலே தோற்றுப்போகும் ரெசிபி உங்களுக்காக..!

பச்சை வாசனை போனதும் வேக வைத்த ப்ரோக்கோலியை சேர்த்து அதில் தூள் வகைகளை சேர்த்துக்கொள்ளுங்கள்.

பின் உப்பு தேவையான அளவு சேர்த்து வதக்கி தட்டுப்போட்டு மூடுங்கள். தண்ணீர் தேவைப்பட்டால் தெளித்துக்கொள்ளுங்கள்.

2 நிமிடங்களுக்கு மூடி வைத்து பிறட்டி எடுக்க சுவையான ப்ரோக்கோலி பொரியல் தயார். இதை சப்பாத்திக்குக் கூட தொட்டு சாப்பிடலாம்.

First published:

Tags: Broccoli, Food recipes