முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ஒரே மாதிரி சட்னி அரைத்து அலுத்து போச்சா..? இந்த கத்தரிகாய் சட்னி செய்து அசத்துங்க...

ஒரே மாதிரி சட்னி அரைத்து அலுத்து போச்சா..? இந்த கத்தரிகாய் சட்னி செய்து அசத்துங்க...

கத்தரிகாய் சட்னி

கத்தரிகாய் சட்னி

இந்த கத்தரிக்காய் சட்னி உங்களுக்கு உதவலாம். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தேங்காய் சட்னி, காரச்சட்னி என எப்போதும் ஆப்ஷன்களே இல்லாமல் ஒரே மாதிரி செய்து கொண்டிருக்கிறீர்களா..? அப்படியெனில் நிச்சயம் இந்த கத்தரிக்காய் சட்னி உங்களுக்கு உதவலாம். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

அரைக்க :

கடலை பருப்பு - 1 tsp

உளுத்தம் பருப்பு - 1 tsp

எண்ணெய் - 1tsp

வெந்தயம் - 1/4 tsp

சீரகம் - 1/2 tsp

மிளகு - 10

காய்ந்த மிளகாய் - 4

பச்சை மிளகாய் - 2

வதக்க :

கத்தரிக்காய் - 1/4 கிலோ

தக்காளி - 1

கொத்தமல்லி - 1 கைப்பிடி

மஞ்சள் தூள் - 1/2 tsp

புளி - நெல்லிக்காய் அளவு

உப்பு - தே.அ

எண்ணெய் - 2 tsp

தாளிக்க :

நல்லெண்ணெய் - 2 tsp

சீரகம் - 1/2 tsp

காய்ந்த மிளகாய் - 1

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை :

கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலைப் பருப்பு போட்டு வதக்கவும். பொன்னிறமாக வறுபட்டதும் தனியாக கொட்டிக்கொள்ளுங்கள்.

அதேபோல் உளுத்தம் பருப்பையும் வறுக்க வேண்டும்.

பின் சீரகம் , வெந்தயம் , காய்ந்த மிளகாய் என மற்ற அனைத்து பொருட்களையும் வதக்கி தட்டில் கொட்டுங்கள்.

இவை அனைத்தும் சூடு தணிய ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

தயிர் இருந்தால் போதும் நொடியில் தோசைக்கு சட்னி ரெடி... உங்களுக்கான ரெசிபி இதோ...

இப்போது மீண்டும் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி கத்தரிக்காய் சுருங்கும் வரை வதக்கிக்கொள்ளுங்கள். பின் தக்காளியை வதக்கிக்கொள்ள வேண்டும்.

இப்போது அந்த அரைத்த பொடியுடன் வதக்கிய கத்தரிக்காய் கலவைகளை சேர்த்து அரைக்க வேண்டும்.

பின் மீண்டும் கடாய் வைத்து அரைத்த விழுதை கொட்டி நன்கு கலந்துவிடுங்கள்.

பச்சை வாசனை போனதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்து சட்னியில் கொட்டுங்கள்.

top videos

    அவ்வளவுதான் கத்தரிக்காய் சட்னி தயார்.

    First published:

    Tags: Brinjal, Chutney