• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • மாலையில் டீ டைமில் கொறிக்க பிரெட் பசலைக் கீரை போண்டா : ஹெல்தியான இந்த ஸ்னாக்சின் ரெசிபி இதோ...

மாலையில் டீ டைமில் கொறிக்க பிரெட் பசலைக் கீரை போண்டா : ஹெல்தியான இந்த ஸ்னாக்சின் ரெசிபி இதோ...

பிரெட் பசலைக் கீரை போண்டா

பிரெட் பசலைக் கீரை போண்டா

டிரை பண்ணி பாருங்க...குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து உண்பார்கள்.

  • Share this:
    டீ டைமில் ஏதாவது சூடாக பொறித்துக்கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து உண்பார்கள். அந்த வகையில் எளிமையான முறையில் பிரெட்டை வைத்து அதேசமயம் ஆரோக்கியமான முறையில் பசலைக்கீரை சேர்த்து போண்டா எப்படி சுடுவது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    பசலைக்கீரை - 2 கப்
    பிரெட் தூள் - 2 கப்
    சீரகம் - 1 tsp
    வெங்காயம் - 1 கப்
    மிளகாய் தூள் - 1 tsp
    மஞ்சள் பொடி - 1/4 tsp
    உப்பு - தே.அ
    எண்ணெய் - வறுக்க தே.அ



    செய்முறை :

    முதலில் பிரெட்டை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக்கொள்ளுங்கள். பின் அதில் பசலைக்கீரையை பொடியாக நறுக்கி அதில் சேர்த்து பிசையுங்கள்.

    அடுத்ததாக மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து பிசைந்துவிட்டுக்கொள்ளுங்கள். போண்டா சுடும் மாவு பதத்தில் இருக்க வேண்டும்.

    பின் கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் உருண்டைகளாக பிடித்து எண்ணெயில் போடவும்.

    முருங்கை இலையில் இருக்கும் நன்மைகளைப் பற்றி தெரியுமா..? இதை படித்தால் வாரம் ஒரு முறையாவது சாப்பிடுவீங்க..!

    பின் அவை பொன்னிறமாக வந்ததும் எடுத்துவிடுங்கள்.

    அவ்வளவுதான் பிரெட் பசலைக்கீரை போண்டா தயார். இதற்கு டொமேட்டோ சாஸ் பொருத்தமாக இருக்கும்.

     

     

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: