மஞ்சூரியன் வகை என்றாலே அது ருசி மிகுந்ததுதான். அதுவும் மொறு மொறு சுவையில் பிரெட் மஞ்சூரியன் கிடைத்தால் எப்படி இருக்கும்? அந்த சுவையை உடனே சுவைக்க இதோ ஸ்டெப்ஸ் உங்களுக்காக...
தேவையான பொருட்கள்
குடை மிளகாய் - 1 , பூண்டு - 3 பற்கள்
இஞ்சி - 1/2 துண்டு
வெங்காயம் - 1, வினிகர் - 1 மேசைக் கரண்டி
சோயா சாஸ் - 3 மேசைக் கரண்டி
தக்காளி சாஸ் - 2 மேசைக் கரண்டி
சில்லி சாஸ் - 1 மேசைக் கரண்டி
மிளகுத் தூள் - 1/4 மேசைக் கரண்டி
உப்பு - 1/4 மேசைக் கரண்டி
சோள மாவு - 1 மேசைக் கரண்டி
தண்ணீர் - 2 கப்
ஸ்பிரிங் ஆனியன் - அரை கப், எண்ணெய் - 3 கப்
பிரெட் கலவைக்கு தேவையான பொருட்கள்
பிரெட் துண்டுகள் - 5
கோஸ் - 2 கப் (சீவியது )
கேரட் - 1/2 கப் (சீவியது )
குடை மிளகாய் - 2 மேசைக் கரண்டி
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1/2 மேசைக் கரண்டி
மிளகுப் பொடி - 1/2 மேசைக் கரண்டி
மிளகாய்ப் பொடி - 1/2 மேசைக் கரண்டி
உப்பு - 1/4 மேசைக் கரண்டி
சோயா சாஸ் - 2 மேசைக் கரண்டி
செய்முறை
பிரெட் துண்டுகளை மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
அதை ஒரு பாத்திரத்தில் போட்டு கோஸ், கேரட் , குடை மிளகாய், இஞ்சி-பூண்டு பேஸ்ட், மிளகுப் பொடி, மிளகாய் பொடி, உப்பு, சோயா சாஸ் ஆகியவற்றை சேர்த்து மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளுங்கள். அதை 2 நிமிடங்கள் ஊற வையுங்கள்.
ஊறியதும் அதை சதுர வடிவில் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். கட்லெட் செய்ய பிடிப்பதைப் போல் தடித்த வாக்கில் பிடிக்க வேண்டும்.
பின் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அந்த பிரெட் துண்டுகளை பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.
பேக்கரி சுவையில் காலிஃப்ளவர் 65 : டிரை பண்ணி பாருங்க...
மற்றொரு கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டுகளை போட்டு வதக்கவும். பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.
பின் பெரிதாக நறுக்கிய குடை மிளகாயை சேர்க்கவும். அதை அதிகமாக வதக்கக் கூடாது.
பின் சோள மாவை தண்ணீரில் கலந்து அதில் ஊற்றவும். பின் கெட்டிப் பதம் வரும் வரைக் கிளரவும். கெட்டிப் பதத்திற்கு வந்ததும் பொறித்த ரொட்டித் துண்டுகளைப் போட்டு கிளரவும்.
பின் ஸ்பிரிங் ஆனியனை தூவி கிளரவும். இப்போது சுவையான பிரெட் மஞ்சூரியன் தயார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.