Home /News /lifestyle /

வீட்டில் பிரெட் பாக்கெட் இருந்தால் காலை உணவுக்கு மொறுமொறு தோசை ரெடி... எப்படி தெரியுமா..?

வீட்டில் பிரெட் பாக்கெட் இருந்தால் காலை உணவுக்கு மொறுமொறு தோசை ரெடி... எப்படி தெரியுமா..?

மொறுமொறு தோசை

மொறுமொறு தோசை

பிரெட் பாக்கெட் தெரிந்தால் உடனே அதை எடுத்து இந்த அருமையான பிரெட் தோசை சுட்டுக்கொடுங்கள். இதன் சுவையால் வீட்டிலும் பாராட்டு மழை பொழியும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    காலையில் டிஃபன் செய்ய எதுவுமே இல்லையே என கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் உங்கள் கண்களில் பிரெட் பாக்கெட் தெரிந்தால் உடனே அதை எடுத்து இந்த அருமையான பிரெட் தோசை சுட்டுக்கொடுங்கள். இதன் சுவையால் வீட்டிலும் பாராட்டு மழை பொழியும்.

    தேவையான பொருட்கள் :

    பிரெட் - 4 துண்டுகள்
    கோதுமை மாவு - 2 tsp
    ரவை - 2 tsp
    தயிர் - 2 tsp
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    பச்சை மிளகாய் - 1
    கேரட் - 1
    மிளகாய் தூள் - 1/2 tsp



    செய்முறை :

    பிரெட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக்கொள்ளுங்கள். மிகவும் பொடியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

    அரைத்ததும் அதை ஒரு கிண்ணத்தில் கொட்டிக்கொள்ளுங்கள்.

    பின் அதில் கோதுமை மாவு, ரவை சேர்த்து கலந்துகொள்ளுங்கள்.

    பின் தயிர், தக்காளி, வெங்காயம், துருவிய கேரட், மிளகாய் தூள் சேர்த்து கலந்துகொள்ளுங்கள்.

    விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்திக்கு வாங்கிய அவல் மீந்துவிட்டதா..? அப்போ சுட சுட இந்த 2 ஸ்நாக்ஸ் செஞ்சிடுங்க...

    இப்போது தோசை ஊற்றும் பதத்திற்கு தண்ணீர் ஊற்றி அதோடு தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துகொள்ளுங்கள்.

    அவ்வளவுதான் மாவு ரெடி. தோசைக்கல்லில் கெட்டியாக ஊற்றி தோசை போல் சுட்டு எடுங்கள்.

    காலை உணவு தயார்...

     
    Published by:Sivaranjani E
    First published:

    Tags: Bread, Breakfast, Dosa

    அடுத்த செய்தி