• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • மழைக்காலத்தில் சூடான பிரெட் சில்லி செஞ்சு சாப்பிடலாமா..? சைனீஸ் ரெசிபில் நாவூறும் சுவை..!

மழைக்காலத்தில் சூடான பிரெட் சில்லி செஞ்சு சாப்பிடலாமா..? சைனீஸ் ரெசிபில் நாவூறும் சுவை..!

பிரெட் சில்லி

பிரெட் சில்லி

பிரெட் துண்டுகளை பயன்படுத்தி பிரெட் சில்லி செஞ்சு சாப்பிட்டு பாருங்க..அத்தனை சுவையாக இருக்கும்.

  • Share this:
சீன உணவுகள் இந்திய சுவையில் செய்து சாப்பிடும்போது அதன் ருசி அலாதியானது. ஃபிரைடு ரைஸ் தொடங்கி சில்லி சிக்கன் வரை எதுவும் நாவூற வைக்கும். அந்த வகையில் பிரெட் துண்டுகளை பயன்படுத்தி பிரெட் சில்லி செஞ்சு சாப்பிட்டு பாருங்க..அத்தனை சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள் :

பிரெட் - 8
எண்ணெய் -
பூண்டு - 2 tbsp
ஸ்பிரிங் ஆனியன் - 2 tbsp
வெங்காயம் - 1 கப்
குடை மிளகாய் - 1/4 கப்
ரெட் சில்லி பேஸ்ட் - 2 tbsp
தக்காளி சாஸ் - 2 tbsp
சோயா சாஸ் - 1 tsp
வினிகர் - 2 tsp
தண்ணீர்
உப்பு - தே.அ



செய்முறை :

பிரெட் துண்டுகளை சுற்றிலும் வெட்டி எடுத்துவிடுங்கள். பின் அவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

பின் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறு தீ வைத்து அந்த பிரெட் துண்டுகளை பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

பின் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு சிறு துண்டாக நறுக்கி அதில் போட்டு வதக்குங்கள்.

பின் வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சேர்த்து வதக்குங்கள். அதில் கொஞ்சம் உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.

புடலைங்காய் வறுவல் ரெசிபி!

வெங்காயன் கண்ணாடி போல் வதங்கியதும் சோயா சாஸ் மற்றும் ரெட் சில்லி பேஸ்ட் சேர்த்து வதக்கி கொஞ்சம் தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் பச்சை வாசனை போக கொதிக்கவிடுங்கள்.

கொதிக்கு கெட்டிப் பதம் வந்ததும் வறுத்த பிரெட் துண்டுகளை சேர்த்து பிரட்டுங்கள்.

இறுதியாக ஸ்பிரிங் ஆனியனை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள். அவ்வளவுதான் பிரெட் சில்லி தயார்.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: