பாகற்காயின் கசப்புத்தன்மை சிலருக்கு பிடிக்காது. இதனால் அதன் நன்மைகளையும் அவர்கள் இழக்கிறார்கள். எனவே அவர்களையும் பாகற்காயை சாப்பிட வைக்கதான் இந்த ரெசிபி... இப்படி செஞ்சு கொடுங்க.. குழந்தைகள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் - 4 tbsp
பாகற்காய் - 300 கிராம்
கடுகு - 1/2 tsp
வெந்தையம் - 1/2 tsp
உளுத்தம் பருப்பு - 1/2 tsp
சீரகம் - 1/2 tsp
மிளகு - 1/4 tsp
பூண்டு - 4
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - 1 கொத்து
தக்காளி - 2
தனியா பொடி - 1 tsp
மிளகாய் தூள் - 1 tsp
மஞ்சள் பொடி - 1/4 tsp
குழம்பு மிளகாய் தூள் - 2 tbsp
புளி - எலுமிச்சை அளவு
உப்பு - தே.அ
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை :
வானலியில் எண்ணெய் விட்டு வட்டமாக நறுக்கிய பாகற்காய்களை போட்டு சிவக்க வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.
பின் அதே எண்ணெயில் கடுகு , வெந்தையம், சீரகம், மிளகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்துக்கொள்ளுங்கள்.
பின் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்குங்கள்.
தக்காளியில் எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். பின் அனைத்து பொடிகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
அடுத்ததாக புளிக்கரைசல் தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள். உப்பு சேர்த்து சுவை பார்த்துக்கொள்ளுங்கள்.
குக்கரில் பீட்ரூட் பொரியல்.. இப்படி செய்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்... வேலையும் மிச்சம்..!
சரியாக இருப்பின் தட்டு போட்டு மூடி 2 நிமிடங்களுக்கு கொதிக்க வையுங்கள். நன்கு கொதித்து பச்சை வாசனை போனதும் பாகற்காய்களை சேர்த்து கிளறுங்கள்.
பின் மீண்டும் தட்டுபோட்டு மூடி தண்ணீர் கொஞ்சம் கொரேவி பதம் வரும் வரை கொதிக்க விடுங்கள்.
தேவையான குழம்பு பதம் வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு கொத்தமல்லி தழை தூவுங்கள்.
அவ்வளவுதான் பாகற்காய் புளிக்குழம்பு தயார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.