'பிசிபெலா பாத்' செய்ய மசாலா பொடி - ஒரு ஸ்பூன் போதும் ருசி ஆளை மயக்கும்

Food Recipe |

'பிசிபெலா பாத்' செய்ய மசாலா பொடி - ஒரு ஸ்பூன் போதும் ருசி ஆளை மயக்கும்
பிசிபெலா பாத்
  • Share this:
பிசிபெலா பாத் அனைவரும் ருசித்து சாப்பிடுவார்கள். குறிப்பாக குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடுவார்கள். எனவே அதற்கு தேவையான பிசிபெலா பாத் பொடி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

எண்ணெய் - 1 tsp


உளுத்தம் பருப்பு - 1 tsp
தனியா - 1 tbsp
கடலைப் பருப்பு - 2 tspவெந்தையம் - 1/2 tsp
ஏலக்காய் - 1
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2
காய்ந்த மிளகாய் - 6
கச கசா - 1 tsp
தேங்காய் - 1/2 கப்செய்முறை :

கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் தயார் நிலையில் வைத்துக்கொள்ளுங்கள். தற்போது கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி தனியா, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு , வெந்தையம் என கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பொருளையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்குங்கள்.

இறுதியாக தேங்காய் துருவலை சேர்த்து வதக்குங்கள்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ருசிக்க ’அவல் கட்லெட்’ - செய்முறை இதோ...!

அனைத்தையும் வதக்கிய பின்பு அடுப்பை அணைத்துவிட்டு அவற்றை தட்டில் போட்டு ஆற வையுங்கள். ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள். மிகவும் பொடியாக அரைக்க வேண்டாம். மொரமொரப்புடன் அரைத்துக்கொள்ளுங்கள்.

பின் அதைக் காற்று புகாத டப்பாக்களில் அடைத்து வைத்து தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
First published: July 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading