Home /News /lifestyle /

குக்கரில் பீட்ரூட் பொரியல்.. இப்படி செய்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்... வேலையும் மிச்சம்..!

குக்கரில் பீட்ரூட் பொரியல்.. இப்படி செய்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்... வேலையும் மிச்சம்..!

பீட்ரூட் பொரியல்

பீட்ரூட் பொரியல்

பெரும்பாலான அம்மாக்கள் காய்கறிகளை சமைக்கும்போது குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் செய்து கொடுப்பார்கள். அந்த வகையில் பீட்ரூட்டின் நன்மைகளை குழந்தைகள் பெற இப்படி செய்து கொடுங்கள்.

காய்கறிகளை சாப்பிட வேண்டும் என்றாலே குழந்தைகளுக்கு மருந்து சாப்பிடுவது போன்று கசப்பான விஷயம்தான். ஆனாலும் அவர்களுக்கான ஊட்டச்சத்தை கிடைக்க அம்மாக்கள் படாத பாடு பட்டு அவர்களுக்கு அந்த காய்கறிகளை கொடுத்தாக வேண்டும். அதனால்தான் பெரும்பாலான அம்மாக்கள் காய்கறிகளை சமைக்கும்போது குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் செய்து கொடுப்பார்கள். அந்த வகையில் பீட்ரூட்டின் நன்மைகளை குழந்தைகள் பெற இப்படி செய்து கொடுங்கள். விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள் :

பீட்ரூட் - 1/2 கிலோ
வெங்காயம் - 1
தக்காளி - 1
மிளகாய் தூள் - 1 1/2 tsp
மஞ்சள் - 1/4 tsp
உப்பு - தே.அ
பூண்டு - 3 பல்
கடுகு - 1/2 tsp
சீரகம் - 1/2 tsp
எண்ணெய் - 3 tsp
கறிவேப்பிலை - 1கொத்து
கொத்தமல்லி - சிறிதளவு



செய்முறை :

குக்கரில் பொடியாக நறுக்கிய பீட்ரூட் சேர்த்து அதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்துக்கொள்ளுங்கள்.

பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு தேவையான அளவு சேர்த்து கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்துவிட்டு குக்கரை மூடிவிடுங்கள்.

இப்போது அடுப்பில் வைத்து வேக வையுங்கள். குக்கர் ஒரு விசில் வந்தால் போதும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.

இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் கடுகு, சீரகம், சேர்த்து தாளியுங்கள்.

வெயில் காலத்திற்கு உடலை குளுர்ச்சியாக வைத்துக்கொள்ள சேப்பங்கிழங்கு மோர் குழம்பு..!

பின் பூண்டை தட்டிப்போடுங்கள். கறிவேப்பிலையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக வேக வைத்த பீட்ரூட்டை இப்போது கடாயில் சேர்த்து பிரட்டுங்கள். தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துவிட்டு தட்டுப்போட்டு மூடிவிடுங்கள்.

10 நிமிடங்கள் நன்கு பிரட்டி வேக வைத்ததும் கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.

அவ்வளவுதான் பீட்ரூட் பொரியல் தயார்.

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Beetroot, Food recipes

அடுத்த செய்தி