கேரளா ஸ்டைல் பீட்ரூட் பச்சடி..! எப்படி செய்வது தெரியுமா..?

பீட்ரூட் பச்சடி

கேரள உணவில் பச்சடி மிகவும் ஃபேமஸ்.

 • Share this:
  கேரள உணவில் பச்சடி மிகவும் ஃபேமஸ். அந்த வகையில் பீட்ரூட்டில் எப்படி பச்சடி செய்வது என்று பார்க்கலாம்.

  தேவையான பொருட்கள் :

  பீட்ரூட் - 2
  தயிர் - 1/2 கப்
  மஞ்சள் பொடி - 1/4 tsp
  உப்பு - தேவையான அளவு

  அரைக்க :

  தேங்காய் - 1/3 கப்
  காய்ந்த மிளகாய் - 3
  இஞ்சி - 1 துண்டு
  கடுகு - 1/2 tsp
  சீரகம் - 1/2 tsp

  தாளிக்க :

  எண்ணெய் - 1 tsp
  கடுகு - 1/2 tsp
  கருவேப்பிலை - சிறிதளவு
  காய்ந்த மிளகாய் - 1  செய்முறை :

  முதலில் பீட்ரூட்டை தண்ணீரில் போட்டு வேக வைத்துக்கொள்ளுங்கள்.

  பின் அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக்கொள்ளுங்கள். தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.

  பீட்ரூட் வெந்ததும் அதில் இந்த அரைத்த பேஸ்ட் மற்றும் மஞ்சள் சேர்த்துக்கொள்ளுங்கள். நன்கு கலந்துவிடுங்கள்.

  தாமரைப் பொரியில் குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸா..? குழந்தைகளுக்குக் கொடுத்தா அவ்வளவு நல்லது..!

  உப்பு சேர்த்து கலந்து அரைத்த விழுது பச்சை வாசனை போகும் வரை வேக வையுங்கள்.

  இறுதுயாக அடுப்பை அணைத்துவிட்டு தயிர் சேர்த்து கலந்துவிடுங்கள்.

  அடுத்ததாக தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்து அதில் ஊற்றுங்கள்.

  அவ்வளவுதான் பீட்ரூட் பச்சடி கேரள சுவையில் ரெடி..!

   

   
  Published by:Sivaranjani E
  First published: