Home /News /lifestyle /

அங்கன்வாடி சத்துமாவில் புட்டு செஞ்சு சாப்பிட்டா ருசியாகவும் இருக்கும்...ஆரோக்கியமாகவும் இருக்கும்

அங்கன்வாடி சத்துமாவில் புட்டு செஞ்சு சாப்பிட்டா ருசியாகவும் இருக்கும்...ஆரோக்கியமாகவும் இருக்கும்

அங்கன்வாடி சத்துமாவில் புட்டு

அங்கன்வாடி சத்துமாவில் புட்டு

வெறும் கஞ்சியாக காய்ச்சி சாப்பிடுவது மட்டுமன்றி புட்டு செய்து சாப்பிடலாம்.

    அங்கன்வாடியில் கொடுக்கும் சத்துமாவு கஞ்சி ஆரோக்கியம் நிறைந்து என்பது அனைவரும் அறிந்ததே. அதை வெறும் கஞ்சியாக காய்ச்சி சாப்பிடுவது மட்டுமன்றி புட்டு செய்து சாப்பிடலாம். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    சத்துமாவு - 1 கப்
    வெல்லம் - 2 tbsp / சர்க்கரை
    நல்லெண்ணெய் - 1 tsp
    நெய் - 1 tsp
    தண்ணீர் - தே.அ
    உப்பு - ஒரு சிட்டிகை
    துருவிய தேங்காய் - 1/4 கப்



    செய்முறை :

    மாவை ஒரு கிண்ணத்தில் போட்டு உப்பு சேர்த்து அதன் மேல் தண்ணீர் தெளித்து உதிரியாக வருமாறு கைகளால் பிசைந்துகொள்ளுங்கள். உதிரியாக வந்ததும் அந்த மாவை இட்லி தட்டில் துணி விரித்து அதன் மீது பரப்பி வையுங்கள்.

    கோவில்பட்டி சிக்கன் குழம்பு சாப்பிட்டிருக்கீங்களா..? அசத்தல் சுவையில் வீட்டில் செஞ்சு பாருங்க ..!

    பின் 10 நிமிடங்களுக்கு வேக வையுங்கள்.

    வெந்ததும் அதை ஒரு தட்டில் போட்டு கரண்டியால் கிளறி காற்றாட வையுங்கள். பின் அதில் எண்ணெய், நெய் , வெல்லம், தேங்காய் சேர்த்து உதிரியாக கைகளாலேயே கிளறுங்கள். அவ்வளவுதான் புட்டு ரெடி. இதை அப்படியே உருண்டையாக பிடித்தும் சாப்பிடலாம்.
    Published by:Sivaranjani E
    First published:

    அடுத்த செய்தி