Home /News /lifestyle /

உடல் சூட்டை தணிக்க உதவும் நெல்லிக்காய் ஜூஸ் : செஃப் சஞ்சீவ் கபூர் பகிர்ந்துகொண்ட ரெசிபி இதோ..

உடல் சூட்டை தணிக்க உதவும் நெல்லிக்காய் ஜூஸ் : செஃப் சஞ்சீவ் கபூர் பகிர்ந்துகொண்ட ரெசிபி இதோ..

நெல்லிக்காய் ஜூஸ்

நெல்லிக்காய் ஜூஸ்

இதை சம்மரில் கூலாக குடிப்பது உடல் சூட்டை தணிக்க உதவும். அதோடு நார்ச்சத்து, நோய் எதிர்ப்பு அழற்சி போன்ற நன்மைகளையும் தருகிறது.

நெல்லிக்காய் ஜூஸ் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் சிறந்த பானமாகும். இதை சம்மரில் கூலாக குடிப்பது உடல் சூட்டை தணிக்க உதவும். அதோடு நார்ச்சத்து, நோய் எதிர்ப்பு அழற்சி போன்ற நன்மைகளையும் தருகிறது. அதோடு வெயில் கால சரும பாதிப்புகளிலிருந்து விடுபடவும் நெல்லிக்காய் ஜூஸ் உதவுகிறது. சரி எப்படி ஜூஸ் போட வேண்டும் என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

நெல்லிக்காய் - 3
தேன் - 3 tsp
உப்பு - 1/2 tsp
தண்ணீர் - 1 கிளாஸ்



செய்முறை :

முதலில் நெல்லிக்காயை நறுக்கி மிக்ஸியில் அரைத்து அதை பிழிந்து ஜூஸை தணியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

பின் அந்த ஜூஸை ஒரு கிளாஸில் ஊற்றி அதோடு தேன், உப்பு சேர்த்து கலந்துவிடுங்கள்.

தர்பூசணி சாப்பிட்டால் விதைகளை குப்பையில் போடுறீங்களா..? இனி அப்படி செய்யாதீர்கள்... ஏன் தெரியுமா..?

பின் தண்ணீர் போதுமான அளவு சேர்த்து நன்கு கலந்துவிட்டு குடியுங்கள். தேவைப்பட்டால் புதினா சேர்த்துக்கொள்ளலாம்.

 

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Amla, Healthy juice, Summer Heat

அடுத்த செய்தி