அரிசி மாவு பயன்படுத்தி இத்தனை உணவுகள் செய்யலாமா..? வேலையை சுலபமாக்கும் ரெசிபீஸ்

காலை உணவு

ஒரே பேட்டரில் இட்லி, தோசை, ஊத்தாப்பம் என பல வெரைட்டிகளை செய்யலாம்.

  • Share this:
இந்தியாவில் எப்படி பல்வேறு கலாச்சாரங்கள் ஒன்றாக இருக்கிறதோ அதேபோல சமையல் வகைகளும் ஒவ்வொரு பகுதிக்கும் மாறுபடுகிறது. ஒவ்வொரு உணவு வகையும் ஆரோக்கியமான நன்மைகள் நிறைந்த உணவு பொருட்களால் செய்யப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் வட மாநிலங்களில் எப்படி கோதுமை ரொட்டி பிரபலமோ, அதேபோல தென்னிந்திய மாநிலங்களில் இட்லி, தோசை ஆகியவை மிகவும் பிரபலம்.

அதிலும், இதனை செய்ய நீங்கள் தனித்தனியாக அரிசி மாவு பேட்டரை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஒரே பேட்டரில் இட்லி, தோசை, ஊத்தாப்பம் என பல வெரைட்டிகளை செய்யலாம். காலையில் வேலைக்கும் செல்லும் அவசரத்தில் ஈஸியான உணவு தயாரிக்க நினைக்கிறீர்களா? உங்களுக்கு சுலபமான வழி இதுதான். தோசை, இட்லி செய்வதற்கு முன்பு இட்லி மாவினை எப்படி தயாரிக்கலாம் என்பது குறித்து காண்போம்.

இட்லி மாவினை எப்படி தயாரிக்கலாம்:

தேவையான பொருட்கள்:

அரிசி -4 கப்,
உளுத்தம் பருப்பு - 1 கப்,
வெந்தயம் - 2 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.



செய்முறை : 

அரிசி, உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயம் ஆகியவற்றை தனித்தனியாக கழுவி ஊற வைக்க வேண்டும். சரியாக 4 முதல் 5 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

அதன் பிறகு தண்ணீரை வடிகட்டி, கிரைண்டரில் போட்டு நன்கு அரைக்க வேண்டும். அரைக்கும் போது மாவு கெட்டியாகாமல் இருக்க போதுமான அளவு நீர் சேர்த்து அரைக்க வேண்டும்.

முதலில் உளுந்து, வெந்தயம் சேர்த்து அரைத்து அதனை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். பின்னர், ஊற வைத்த அரிசியை கிரைண்டரில் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும்.

அரிசி நல்ல மாவு பதத்திற்கு வந்ததும் அதனை உளுத்து மாவோடு சேர்த்து, பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து கைகளை வைத்து கலக்கி விட வேண்டும்.

பின்னர், அந்த பேட்டரை ஒரு இரவு முழுவதும், அல்லது 12 முதல் 14 மணி நேரத்திற்கு புளிக்க வைக்க வேண்டும். அவ்வளவு தான் மாவு பேட்டர் ரெடி. இப்பொது, இதனை வைத்து தினமும் காலையில் ஒரு ரெசிபி செய்து அசத்தலாம். அவற்றை, எப்படி செய்வது என்பதை இனி காண்போம்.



இட்லி : புளிக்க வைத்த அரிசி மாவினை வைத்து இட்லியை மிகவும் ஈஸியா தயாரிக்கலாம். முதலில் இட்லி பானையில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். பிறகு இட்லி தட்டில் எண்ணெய் தடவி தட்டில் உள்ள அச்சில் மாவினை நிரப்பிக்கொள்ளுங்கள். நிரப்பிய பிறகு, தட்டினை இட்லி பானையில் வைத்து 12 நிமிடங்களுக்கு வேக வைக்க வேண்டும். அவ்வளவு தான் இட்லி ரெடி. இட்லியை சாம்பார் மற்றும் தேங்காய் சட்னியுடன் சூடாக பரிமாறலாம்.



ஊத்தாப்பம் : ஊத்தாப்பம் தயாரிக்க, ஒரு நான்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைக்க வேண்டும். தவா சூடானதும் அரைத்து வைத்த மாவில் ஒரு கரண்டி எடுத்து அதை தவாவில் மொத்தமாக ஊற்ற வேண்டும். இதையடுத்து ஊதப்பதின் மேல் நறுக்கிய வெங்காயம், தக்காளி, கேப்சிகம் மற்றும் கேரட் ஆகியவற்றை தூவி விடலாம். மேலும் தோசையின் ஓரங்களில் எண்ணெய் ஊற்ற வேண்டும். இப்பொது தோசை தவாவை மூடி ஒரு நிமிடத்திற்கு வேக வைக்க வேண்டும். பிறகு உத்தப்பம் இருபுறமும் பொன்னிறமாகும் வரை திருப்பி விட்டு சமைக்க வேண்டும். இதனை தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையோ பிரமாதம்.



தோசை  : நல்ல மொறுமொறு தோசை செய்ய மாவு கெட்டியாக இல்லாமல், தோசை வார்க்கும் பதத்தில் இருக்க வேண்டும். எனவே தேவைப்பட்டால் அதில் தண்ணீரை சேர்த்துக்கொள்ளுங்கள். இப்பொது ஒரு தோசை தவா அடுப்பில் வைத்து சூடாக்கி, அதில் ஒரு கரண்டி மாவினை ஊற்றி மெல்லியதாக வரும் வரை வட்டமாக வார்க்க வேண்டும். நீங்கள் விரும்பினால் தோசையின் மேல் உருளைக்கிழங்கு மசாலா அல்லது பன்னீர் மசாலா சேர்த்து சமைக்கலாம். இதனை தேங்காய் சட்னி மற்றும் சாம்பாருடன் சேர்த்து சாப்பிட்டால் காட்டாயம் சுவையாக இருக்கும்.



குழிப்பணியாரம்  : இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவருக்கும் பிடிக்கும் ஒரு ரெசிபி. இதனை தயாரிக்க நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அரைத்து வைத்த மாவில் சிறிது நறுக்கிய வெங்காயம், தக்காளி, கேப்சிகம் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து கலக்கி கொள்ளுங்கள். இப்பொது குழிப்பணியார சட்டியை அடுப்பில் வைத்து, அதன் அச்சுகளில் தேவையான அளவு எண்ணெய்யை சேர்த்து சூடாக்க வேண்டும். அச்சுகள் நன்கு சூடானதும் தயார் செய்து வைத்த மாவினை ஊற்ற வேண்டும். சிறிது நேரத்திற்கு பணியார சட்டியை மூடி வேக வைக்க வேண்டும். இப்போது பணியாரத்தின் ஒரு பகுதி வெந்திருக்கும். மறுபகுதி வேக குழிப்பணியாரத்தை திருப்பிப்போட வேண்டும். அவ்வளவுதான் இருபுறமும் வெந்ததும் அதனை தேங்காய் சட்னியுடன் வைத்து பரிமாறலாம்.

 
Published by:Sivaranjani E
First published: