முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / 15 நிமிடத்தில் சாம்பார் வைக்க தெரியுமா..? இந்த ரெசிபியை தெரிஞ்சுக்கோங்க...

15 நிமிடத்தில் சாம்பார் வைக்க தெரியுமா..? இந்த ரெசிபியை தெரிஞ்சுக்கோங்க...

சாம்பார்

சாம்பார்

நாள் முழுவதும் கிட்சனில் நின்றாலும் வேலை ஓயாது. இதுபோன்ற சிக்கல்களை தவிர்க்க சில குறுக்கு வழிகள், டிப்ஸ், ஹேக்ஸ் தெரிந்து வைத்துக்கொள்வது அவ்வபோது உதவலாம். அந்த வகையில் நொடியில் சாம்பார் வைக்க உங்களுக்கு கற்றுத்தருகிறோம்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கிட்சன் பக்கம் சென்றாலே வேலை சீக்கிரம் முடிந்துவிட வேண்டும் என்றுதான் பலரும் நினைப்பார்கள். ஆனால் அன்றைய நாள் முழுவதும் கிட்சனில் நின்றாலும் வேலை ஓயாது. இதுபோன்ற சிக்கல்களை தவிர்க்க சில குறுக்கு வழிகள், டிப்ஸ், ஹேக்ஸ் தெரிந்து வைத்துக்கொள்வது அவ்வபோது உதவலாம். அந்த வகையில் நொடியில் சாம்பார் வைக்க உங்களுக்கு கற்றுத்தருகிறோம். ரெசிபி இதோ...

தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு - 1 கப்

சின்ன வெங்காயம் - 7

மஞ்சள் - 1/2 tsp

தண்ணீர் - 2 1/2 கப்

உப்பு - தே.அ

காய்கறிகள்

சாம்பார் பொடி - 3 tsp

மிளகாய் தூள் - 1 tsp

புளி - சிறிதளவு

தக்காளி - 1

பூண்டு - 6 பற்கள்

தாளிக்க :

கடுகு - 1 tsp

சீரகம் - 1 tsp

காய்ந்த மிளகாய் - 3

பெரிய வெங்காயம் - 1

பெருங்காயத்தூள் - 1/2 tsp

கறிவேப்பிலை , கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை :

துவரம்பருப்பைக் கழுவி குக்கரில் போட்டுக்கொள்ளுங்கள்.புளி ஊற வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

பின் அதிலேயே சின்ன வெங்காயம், மஞ்சள், தக்காளி, பூண்டு ,உப்பு சிறிதளவு சேர்த்து தண்ணீர் ஊற்றி 4 விசில் வரும்வரை வேக வைத்துக்கொள்ளுங்கள்.

விசில் வந்ததும் விசிலைத் திறந்துவிட்டு பருப்பை குக்கரிலேயே கடைந்துகொள்ளுங்கள்.

Also Read : இரவு சுட்ட சப்பாத்தியில் சாண்ட்விச் செய்யலாம்... காலை உணவுக்கான ரெசிபி..!

பின் அதிலேயே நறுக்கிய காய்கறிகள், மிளகாய் பொடி, சாம்பார் பொடி , உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.

புளித்தண்ணீருடன் சேர்த்து, நீங்கள் சேர்த்துள்ள காய்கறி அளவுக்கு ஏற்ப தண்ணீர் ஊற்றுங்கள்.

மீண்டும் குக்கரை மூடிவிட்டு 1 விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.

தாளிப்பதற்கு வானலி வைத்து தாளிக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்துவிடுங்கள்.

குறிப்பு : பருப்பு தனியாக வேக வைக்கவேண்டாம் எனில் பருப்பு சேர்க்கும்போதே காய்கறிகள், சாம்பார் பொடி , உப்பு, புளி தண்ணீர் என அனைத்தையும் மொத்தமாக சேர்த்து 3 விசில் வரும்வரை அணைத்துவிடுங்கள். பின் வானலி வைத்து தாளித்துக்கொள்ளுங்கள்.

First published:

Tags: Food recipes