முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / மகா சிவராத்திரி 2023: பூ போன்ற பூரண கொழுக்கட்டை செய்ய இதோ டிப்ஸ்..!

மகா சிவராத்திரி 2023: பூ போன்ற பூரண கொழுக்கட்டை செய்ய இதோ டிப்ஸ்..!

பூரணக் கொழுக்கட்டை

பூரணக் கொழுக்கட்டை

Maha shivratri 2023 | நீங்கள் பச்சரிசி மாவில் சுடுதண்ணீரை ஊற்றி பிசையும் போது ரொம்பவும் கட்டியாக பிசைந்து விட்டால், கொழுக்கட்டை மிகவும் கல்லு போல வரும். அதே சமயம் நிறைய தண்ணீர் ஊற்றி மாவு பிசைந்து விட்டால் கொழுக்கட்டை பிசுபிசுவென வரும். அதை மட்டும் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மகா சிவராத்திரிக்கு படையலிடும் பூரண கொழுக்கட்டை சில நேரங்களில் மாவு இறுகி கல் போல் ஆகிவிடும். அப்படி மாறாமல் எப்பாடி பூ போல் செய்வது என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

அரிசி மாவு - 1 கப்

வெல்லம் - 1/2 கிலோ

தேங்காய் - துருவியது 1

நெய் - 2 ஸ்பூன்

தண்ணீர் - 2 கப்

உப்பு - 1 சிட்டிகை

செய்முறை :

1. கடாயில் தண்ணீர் வைத்து கொதிக்க விடுங்கள். அதில் 1 ஸ்பூன் நெய் விட்டு , உப்பு சேர்த்து பின் அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறுங்கள்.

2. நிறைய பேர் இந்த தண்ணீரில் எண்ணெய் ஊற்றி தான் கொதிக்க வைப்பார்கள். ஆனால் எண்ணெய்க்கு பதில் நெய் ஊற்றி பிசைந்து பாருங்கள். இந்த தண்ணீரை ஊற்றி கொழுக்கட்டை மேல் மாவு பிசைந்தால் கொழுக்கட்டை ஆறினாலும் மேல் மாவு மிருதுவாக வரும்.

3. தண்ணீர் அதிகம் வற்றாமல் கொஞ்சம் தண்ணீர் பதம் இருக்கும்போதே அடுப்பை அணைத்துவிடுங்கள். இல்லையெனில் வெந்ததும் மாவு இறுகிவிடும். அதன் சூடு தணிந்ததும் மீண்டும் கைகளால் பிசைந்துகொள்ளுங்கள்.

4.  அடுத்ததாக பூரணம் தயாரிக்க கடாயில் வெல்லத்தை உடைத்துப் போட்டு அரை கிளாஸ் தண்ணீர் விட்டு கொதிக்க விடுங்கள்.

5. வெல்லம் உறுகியதும் வடிகட்டி மீண்டும் கடாயில் ஊற்றி கிளறுங்கள். அதில் தேங்காய்,  நெய் சேர்த்துக்கொள்ளுங்கள்.

6. தண்ணீர் இறுகி பூரண பதம் வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.

Also see... மகா சிவராத்திரி 2023 எப்போது? தேதி, நேரம் குறித்த தகவல்கள்...

7. தற்போது பிசைந்த மாவை சிறு உருண்டையாக எடுத்துக்கொள்ளுங்கள். பின் சிறிய வாழை இலையில் எண்ணெய் தடவி அதில் மாவை வடை போல் தட்டி அதன் நடுவே ஒரு ஸ்பூன் பூரணம் வைத்து அப்படியே மடித்துவிட்டு ஓட்டைகளின்றி மூடி விடுங்கள்.

8. உருண்டையாக வேண்டுமெனில் உருட்டி பின் பூரணம் வைத்து மூட வேண்டும்.அதை தற்போது இட்லி தட்டி வைத்து மூடி விட்டு 15 நிமிடங்கள் கழித்து திறக்க பூரண கொழுக்கட்டை பூ போல் வெந்திருக்கும்.

குறிப்பு:

1. கொழுக்கட்டை எந்த வடிவில் வேண்டுமோ அதற்கான அச்சுகள் கடைகளில் கிடைகும். அதனை வாங்கி செய்யலாம்.

2. இனிப்புக்கு வெல்லத்தையும் உங்களுக்கு தேவையான அளவு சேர்த்துக் கொள்ளலாம்.

3. நீங்கள் பச்சரிசி மாவில் சுடுதண்ணீரை ஊற்றி பிசையும் போது ரொம்பவும் கட்டியாக பிசைந்து விட்டால், கொழுக்கட்டை மிகவும் கல்லு போல வரும். அதே சமயம் நிறைய தண்ணீர் ஊற்றி மாவு பிசைந்து விட்டால் கொழுக்கட்டை பிசுபிசுவென வரும். அதை மட்டும் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும்.

First published:

Tags: Maha Shivaratri, Sweet recipes