ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

நன்மைகளை அள்ளித்தரும் மேஜிக் ப்ரோக்கோலி ஸ்மூத்தி ரெசிபி...

நன்மைகளை அள்ளித்தரும் மேஜிக் ப்ரோக்கோலி ஸ்மூத்தி ரெசிபி...

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலி வழங்கும் ஆரோக்கிய நன்மைகளுடன் கூடிய ஊட்டச்சத்து நிறைந்த ஒரு ஸ்மூத்தியை தயாரிக்க நீங்கள் ப்ரோக்கோலியுடன் பின்வரும் பொருட்களையும் சேர்த்து பல நிமிடங்கள் பிளெண்ட் செய்ய வேண்டும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆரோக்கியமான பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சூப்பர் ஃபுட்டாக இருக்கிறது ப்ரோக்கோலி. ஆன்டி-பாக்டீரியா மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் ப்ரோக்கோலியில் நிறைந்துள்ளன. உடல் ஆரோக்கியம் முதல் சரும ஆரோக்கியம் வரை பலவற்றுக்கு உதவும் வைட்டமின் சி மற்றும் எடை இழப்புக்கு ஏற்ற ஃபைபர் இதில் அடங்கி இருக்கிறது.

தவிர இந்த காய் அதன் கேன்சர் தடுக்கும் மற்றும் டிஎன்ஏ சேதத்தை சரி செய்யும் பண்புகளுக்காகவும் பிரபலமாக உள்ளது. ப்ரோக்கோலியில் வைட்டமின் சி தவிர வைட்டமின் கே, மாங்கனீஸ், பொட்டாசியம், மெக்னீசியம், ஒமேகா -3, துத்தநாகம், கால்சியம் மற்றும் இரும்பு போன்ற பல மினரல்ஸ்களின் சிறந்த மூலமாக இருக்கிறது.

ப்ரோக்கோலியில் உள்ள அதிக ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் பயோஆக்டிவ் காம்பவுன்ட்ஸ் இந்த பச்சை காய்கறியை நம் டயட்டில் சேர்ப்பதற்கு முக்கிய காராணமாக இருக்கின்றன. ப்ரோக்கோலியை சாப்பிட நிறைய சுவையான வழிகள் உள்ளன. நீங்கள் ப்ரோக்கோலி அதிகம் சாப்பிட வேண்டுமா..? அதற்கு ஒரு சுவாரஸ்ய வழி உள்ளது. அது தான் ப்ரோக்கோலி ஸ்மூத்தி. ப்ரோக்கோலி ஸ்மூத்திக்கான ரெசிப்பி மற்றும் ஆரோக்கிய நன்மைகளை இங்கே பார்க்கலாம். ப்ரோக்கோலி வழங்கும் ஆரோக்கிய நன்மைகளுடன் கூடிய ஊட்டச்சத்து நிறைந்த ஒரு ஸ்மூத்தியை தயாரிக்க நீங்கள் ப்ரோக்கோலியுடன் பின்வரும் பொருட்களையும் சேர்த்து பல நிமிடங்கள் பிளெண்ட் செய்ய வேண்டும்.

தேவையான பொருட்கள்:

பெரிய ப்ரோக்கோலி பூக்கள் - 4, பசலை கீரை - 1/2 கப், ஃப்ரோசன் பனானா (Frozen banana) - 1/2 கப், ஃப்ரோசன் மேங்கோ (Frozen mango) - 1/2 கப், இனிப்பு சேர்க்காத பால் - 1/2 கப், யோகர்ட் - 1/4 கப், மேப்பிள் சிரப் (maple syrup) - 1-2 டீஸ்பூன்

டிப்ஸ்:

- எந்த வகை ஸ்மூத்தியாக இருந்தாலும் கூட சிறிது வாழைப்பழம் சேர்ப்பது அதனை நன்கு திக்காக்க உதவும்.

- அதே போல ஸ்மூத்தியை தயார் செய்யும் போது நன்கு கூழ் பதமாகும் வரை அதனை மிக்சியில் போட்டு பிளெண்ட் செய்யவும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்:

உடலை நோய் மற்றும் தொற்றுகளில் இருந்து பாதுகாக்க உதவும் வைட்டமின் சி ப்ரோக்கோலியில் நிறைந்துள்ளது. எனவே நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதோடு கிருமிகள், வைரஸ்களிலிருந்து தற்காத்து கொள்ளும் உடல் திறனை ப்ரோக்கோலி அதிகரிக்கிறது.

கொலஸ்ட்ரால்:

ப்ரோக்கோலியில் அடங்கி இருக்கும் கரையக்கூடிய நார்ச்சத்து உடலில் இருந்து தேவையற்ற கொலஸ்ட்ராலை வெளியேற்றுகிறது. மேலும் இதில் உள்ள ஃபைபர் சத்து, செரிமானப் பாதையில் காணப்படும் பித்த அமிலங்களை பிணைத்து, நம் உடலில் இருந்து கொலஸ்ட்ராலை வெளியேற்ற உதவுகிறது.

எலும்பு ஆரோக்கியம்:

ப்ரோக்கோலியில் காணப்படும் அதிக கால்சியம் மற்றும் வைட்டமின் கே வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளுக்கு உதவுகிறது. கால்சியம் தவிர ப்ரோக்கோலியில் காணப்படும் ஜிங்க், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற பிற தாதுக்கள் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் புதிய தாய்மார்களுக்கு அற்புதமான உணவாக இருக்கின்றன.

Also Read : ஃபிட்னஸ் பிரியர்களுக்கு ஹெல்தியான ஆப்பிள் ஓட்ஸ் ஸ்மூதி : நீண்ட நேரம் பசியே தெரியாது..!

எடை இழப்பு:

ப்ரோக்கோலியில் கலோரிகள் குறைவு மற்றும் நார்ச்சத்து அதிகம் என்பதால் எடை இழப்புக்கு பெரிதும் உதவுகிறது. தவிர இந்த காய் செரிமானம் மற்றும் மலச்சிக்கலுக்கும் உதவும்.

First published:

Tags: Broccoli, Smoothie, Weight loss